| 
 தேனித் தமிழ்ச் சங்கம் 
(பதிவு எண்: 205/2017) 
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா. 
 | 
| 
 உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது. 
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019  | 
விண்ணப்பப் படிவங்கள்  | 
| 
 தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர் சேர்க்கை  
தேனி மாவட்டத்தில் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, கலைகள் சார்ந்த துறைகளில் வளர்ச்சியையும், செழுமையையும் இலக்காகக் கொண்டு பதிவு பெற்ற அமைப்பாகச் செயல்பட்டு வரும் தேனித் தமிழ்ச் சங்கம் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு பணிகளைச்  செய்து வருகிறது. தேனித் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர விரும்புபவர்கள் கீழ்க்காணும் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, அதனை  “thenitamilsangam@gmail.com” எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது தேனித் தமிழ்ச் சங்கம், 10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு எனும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். 2. உறுப்பினர் சேர்க்கைக்காகப் பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும், சங்கத்தின் அடுத்து வரும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்படும். பொதுக்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தேனித் தமிழ்ச் சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான அனுமதி குறித்த தகவல் தெரிவிக்கப்படும். 3. புதிய உறுப்பினர் சேர்க்கை அனுமதி கிடைக்கப் பெற்றவர்கள் மட்டும் உறுப்பினர் நுழைவுக் கட்டணம் ரூ 200/-, ஆண்டுக் கட்டணம் ரூ 120/- மற்றும் உறுப்பினர் அட்டைக் கட்டணம் ரூ 150/- என்று மொத்தம் ரூ 470/- செலுத்திப் புதிய உறுப்பினராக இணைந்து கொள்ளலாம். 4. தேனி மாவட்டத்தில் பிறந்து அல்லது வாழ்ந்து, தற்போது பிற மாவட்டத்தில் வசித்து வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பின் , உறுப்பினர் நுழைவுக் கட்டணம் ரூ 500/-, ஆண்டுக் கட்டணம் ரூ 120/- மற்றும் உறுப்பினர் அட்டைக் கட்டணம் ரூ 150/- என்று மொத்தம் ரூ 770/- செலுத்திப் புதிய உறுப்பினராக இணைந்து கொள்ளலாம். 6. ஆதார் அட்டையில் இடம் பெற்றிருக்கும் முகவரியே, உறுப்பினர் சேர்க்கைக்கான முகவரியாகக் கொள்ளப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். 7. புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஒப்புதல் கிடைக்காமல், எந்தவிதத்திலும் பணம் செலுத்தக் கூடாது. அப்படிச் செலுத்தினால், அந்தப் பணம் திருப்பி அளிக்கப்படாது என்பதுடன், அப்பணம் நன்கொடையாக வரவு வைத்துக் கொள்ளப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். 
 
  | 

