TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - விண்ணப்பப் படிவங்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

விண்ணப்பப் படிவங்கள்
தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர் நிலையினைப் புதுப்பித்தல்

தேனித் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் செலுத்திய உறுப்பினர் கட்டணம் 31-3-2023 ஆம் நாளுடன் நிறைவுற்றது.

தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் வலைத்தளத்திலுள்ள (www.thenitamilsangam.org) உறுப்பினர் படிவத்தை முழுமையாக நிரப்பி, புதிய ஒளிப்படத்தை அதில் ஒட்டி 2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான உறுப்பினர் கட்டணம் ரூ.120/- மற்றும் உறுப்பினர் அட்டைக் கட்டணம் ரூ.100/- என்று மொத்தம் ரூ.220/-ஐ தேனி, பழைய பேருந்து நிலையம், சரண்யா அடுமனை (பேக்கரி) ராஜாராம் மருந்தகம் இடையிலான சந்து (சுப்பன் தெரு) ஸ்ரீ விக்னேஸ்வரா ஒளிப்பட நிலையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டு, அதனை விண்ணப்பத்தில் குறிப்பிட்டு விண்ணப்பத்தினை அங்கேயேச் சமர்ப்பித்திட வேண்டும்.

உறுப்பினர் நிலையினைப் புதுப்பிக்க விரும்புபவர்கள் கவனத்திற்கு:

* ஆதார் அட்டை நகல் இணைக்கப்படாத விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.

* விண்ணப்பப் படிவத்தில் ஒளிப்படம் இல்லாதிருத்தல், உறுப்பினர் கட்டணம் செலுத்திய தகவல்கள் இல்லாதிருத்தல் போன்ற விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.

* கடந்த ஆண்டுக்கான கட்டணம், உறுப்பினர் அட்டைக் கட்டணம் மற்றும் சங்கத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் எதுவும் பாக்கியிருப்பின் அந்தக் கட்டணத்தையும் செலுத்திட வேண்டும். அப்படிச் செலுத்திடாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

* தங்களைப் பற்றிய முழுமையான சுயவிவரக் குறிப்பு (வலைத்தளத்தில் சேர்த்திடத் தேவையான தகவல்கள் இருக்க வேண்டும்) இணைக்கப்பட வேண்டும்.

* விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 21-5-2023.

* கடைசி நாளுக்குப் பின்னர் பெறப்படும் எந்தவொரு புதுப்பித்தல் விண்ணப்பப் படிவமும் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

கீழ்க்காணும் உறுப்பினர் நிலை புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் படிவத்தினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)