TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - விண்ணப்பப் படிவங்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

விண்ணப்பப் படிவங்கள்
தேனித் தமிழ்ச் சங்கம் - புரவலர் சேர்க்கை

தேனி மாவட்டத்தில் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, கலைகள் சார்ந்த துறைகளில் வளர்ச்சியையும், செழுமையையும் இலக்காகக் கொண்டு பதிவு பெற்ற அமைப்பாகச் செயல்பட்டு வரும் தேனித் தமிழ்ச் சங்கம் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. தேனி மாவட்டத்தின் முதன்மைத் தமிழ்ச் சங்கமாக வளர்ந்து கொண்டிருக்கும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் நிதி ஆதாரங்களைப் பெருக்கும் நோக்கத்துடன் தேனித் தமிழ்ச் சங்கத்திற்கு ரூ.10,000/- நன்கொடை அளிக்கும் தமிழ் ஆர்வலர்களைச் சங்கத்தின் புரவலர்களாகவும், ஆலோசனைக்குழு உறுப்பினர்களாகவும் கொண்டு செயல்படுவதென்று முடிவு செய்யப்பெற்றுள்ளது. அதன்படி, இச்சங்கத்தில் தமிழ் மொழி வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட எவரும் ரூ.10,000/- நன்கொடையாக அளித்துப் புரவலராக இணைந்து கொள்ளலாம்.

தேனித் தமிழ்ச் சங்கத்தில் புரவலராகச் சேர்ந்திட விரும்புபவர்கள் கீழ்க்காணும் விதிமுறைகளை ஒருமுறைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

1. உலகில் எப்பகுதியில் வசிப்பவர்களும் புரவலராகச் சேர்ந்து கொள்ள முடியும்.

2. புரவலராகச் சேர்க்கை பெற விரும்புபவர்கள் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழர் கலை, பண்பாடு போன்றவைகளில் ஆர்வம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

3. புரவலர்கள் எவரும் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிருவாகக்குழு, பொதுக்குழுப் பணியிடங்களுக்குப் போட்டியிட இயலாது.

4. புரவலராக சேர்க்கை பெற்றவர்கள் சங்கத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாகச் செயல்பட முடியும்.

5. சங்கத்தின் நிருவாகக் குழு, பொதுக்குழுக் கூட்டங்களில் பங்கேற்று சிறந்த ஆலோசனைகளை வழங்கலாம். இருப்பினும், அந்த ஆலோசனைகளை ஏற்பதும் நிராகரிப்பதும், சங்கத்தின் நிருவாகக்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்துகளுக்குட்பட்டது.

6. புரவலராகச் சேர்க்கை பெறுபவர்கள் சங்கத்தினால் நடத்தப்பெறும் கூட்டம், கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளில் மேடையில் அமர்வதற்கான வாய்ப்பளிக்கப்படும். புரவலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், சேர்க்கை வரிசையில் வாய்ப்பு வழங்கப்படும்.

7. தேனித் தமிழ்ச் சங்கத்தின் வலைத்தளத்தில் புரவலர்கள் படம் மற்றும் அவர்களைப் பற்றிய குறிப்புகள் தனித்தனிப் பக்கங்களில் இடம் பெறும்.

8. புரவலர்களாகச் சேர்க்கை பெற விரும்புபவர்கள் புரவலர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை நிரப்பி, அதனுடன் புரவலர் சேர்க்கைக் கட்டணம் ரூ.10000/- செலுத்த வேண்டியிருக்கும்

9. புரவலர் சேர்க்கை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, நிருவாகக்குழுவின் ஒப்புதலுக்குப் பின்னர் புரவலர் சேர்க்கை உறுதிப்படுத்தப்படும்.

10. புரவலர் சேர்க்கை உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு, அடுத்து நடைபெறும் கூட்டத்தில் “தேனித் தமிழ்ச் சங்கத்தின் புரவலர் சான்றிதழ்” வழங்கிச் சிறப்பிக்கப்படும்.

கீழ்க்காணும் புரவலர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்

தேனித் தமிழ்ச் சங்கம் - வங்கிக் கணக்கு விவரம்

தேனித் தமிழ்ச் சங்கம், தேனி, வீரபாண்டி கிளையிலுள்ள யூனியன் வங்கிக் கிளையில் நடப்புக் கணக்கினைக் கொண்டிருக்கிறது. வங்கிக் கணக்கு விவரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

கணக்குப் பெயர்:
Account Name:

கணக்கு வகை:
Account Type:

கணக்கு எண்:
Account Number:

வங்கியின் பெயர்:
Bank Name:

கிளை:
Branch:

IFSC Code:

MICR Code:


பணம் செலுத்துவதற்கு முன்பாக அது குறித்த தகவலை 9940785925 (தலைவர்) அல்லது 9842239545 (பொருளாளர்) எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது புலனம் (Whatsapp) வழியாகத் தகவலை அனுப்பி வைக்கலாம்.


© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)