TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனீ விருதாளர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

சொற்சுவைத் தேனீ விருதாளர்


செல்வி ஐஸ்வர்யா கணேசன்

செல்வி ஐஸ்வரியா கணேசன் அவர்கள் இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலை மாணி பட்டமும் (BFA), இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணி - இசை ( வீணை), (M.Music) முதுதத்துவமாணி - இசை (M.Phil - Music) ஆகிய பட்டங்களையும் பெற்றிருக்கிறார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுமாணி (MA in Tamil) பட்டத்தினையும் பெற்றுள்ளார். இதழியல், உளவியல், கணனி, ஆங்கிலம், சிங்களம் தொடர்பாக டிப்ளோமா கற்கை நெறியினை நிறைவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் தற்காலிக போதனாசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், அதன் பிறகு இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இசைத்துறையின் வீணை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார்.

பல்கலைக்கழகக் கற்றலின் போது, பல புலமைப் பரிசில்களையும், தங்கப்பதக்கத்தினையும் பெற்றுள்ளார். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வெளியாகும் பல்வேறு ஆய்விதழ்களில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் பல இடம் பெற்றிருக்கின்றன.

இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இந்தியாவிலிருக்கும் விருதாளர்களுக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘சொற்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றது.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இவ்விழாவில் பங்கேற்க இயலாது என்பதால், மின்னஞ்சல் வழியாக விருதுச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.


© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)