TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனீ விருதாளர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

சொற்சுவைத் தேனீ விருதாளர்


கலாநிதி தெட்சணாமூர்த்தி பிரதீபன்

கலாநிதி தெட்சணாமூர்த்தி பிரதீபன் அவர்கள், சுவாமி விபுலாநந்த இசை நடனக் கல்லூரியில் இசைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் இளநிலை இசையியல் (B.Music), முதுநிலை இசையியல் (M.Music) பட்டங்களைப் பெற்றார். அதன்பிறகு, இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராகவும், இலங்கை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராகவும் கடமையாற்றி, கிழக்குப் பல்கலைக் கழகம், சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இசைத்துறைத் தலைவராகவும் கடமையாற்றினார். தற்போது சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார்.

பல்கலைக்கழகக் கற்றலின் போது NCAS புலமைப் பரிசிலைப் பெற்றுக் கொண்டதோடு, அதிக மதிப்பெண்களைப் பெற்றுக் கொண்டதற்காக விருதுச் சான்றிதழினையும் பெற்றிருக்கிறார். இவரது முனைவர் பட்ட ஆய்வின் ஊடாக “தமிழ்” எனும் பெயரில் ஒரு தாள இசைக் கருவியொன்றினைப் புதிதாக வடிவமைத்து அறிமுகப்படுத்தியிருக்கின்றார். தற்பொழுது அதற்கான உரிமத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.

இலங்கையில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஆய்வரங்குகளில் கலந்து சிறப்பித்து வருவதோடு ஆய்வுக்கட்டுரைகளையும் சமர்ப்பித்தும் வருகின்றார்.

இலங்கையிலும், வெளிநாடுகளிலும் இசை தொடர்பான நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புக்களில் கடமையாற்றி வருவதோடு புதிய பாடத்திட்டவரைவுகள், இசைக்கச்சேரிகள் செய்தல், நாடகங்களுக்கு இசையமைத்தல், நடனங்களுக்குப் பக்க இசை வழங்குதல், தமிழர்களின் இசைக்கருவிகளை ஒன்றிணைத்து இன்னிய அணிகளை உருவாக்குதல் என இவரின் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இந்தியாவிலிருக்கும் விருதாளர்களுக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘சொற்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றது.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இவ்விழாவில் பங்கேற்க இயலாது என்பதால், மின்னஞ்சல் வழியாக விருதுச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)