TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனீ விருதாளர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

சொற்சுவைத் தேனீ விருதாளர்


திருமதி சுகந்தி நாடார்

வட சென்னையில் பிறந்து, மதுரையில் வளர்ந்து, பெங்களூரில் சட்டக் கல்வி பயின்று 1993ம் ஆண்டு முதல் வட அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் கணவர் மருத்துவர் வெங்கடேஷ் நாடார் மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். கணவர் வெங்கடேஷ் நாடார் ஒரு இருதய மருத்துவச் சிகிச்சை வல்லுநர். அமெரிக்காவில் இணையம் பற்றி Associate in Arts பட்டப் படிப்பையும், கல்விக்கான இணையத் தொழில்நுட்பத்தில் முதுகலை அறிவியல் பட்டமும் பெற்றுள்ளார். தமிழ் ஆர்வலரான இவர், தமிழ்கற்றல் கற்பித்தலுக்காக, ‘அடுத்தத் தலைமுறை தமிழ்’ என்ற வாசகத்தை முன்னிலைப்படுத்தி, ‘தமிழ் அநிதம்’ (Tamil Unlimited) என்னும் பன்னாட்டு அமைப்பு ஒன்றை நிறுவியுள்ளார். அதன் வழியாகத் தமிழ்நாட்டில் இருக்கும் பல கல்லூரிகளில் கணினிப் பயிலரங்குகளை நடத்தி இருக்கிறார். தமிழ் கற்றல் கற்பித்தலிலும், தமிழில் மழலை இலக்கியங்களின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கணினி வழிப் பணியாற்றி வருகிறார்.

அம்மா இங்கே வா வா, ஆடு, அழகே தமிழே முருகா என்ற மழலை படக்கதை நூல்களையும், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், அன்பு, மாற்றியோசி எனும் சிறுவர் சிறுகதை நூல்களையும், சங்கேத செலாவணி (crypto currency) என்ற நூலையும் தமிழில் எழுதியுள்ளார்.

‘வல்லமை மின்னிதழின் வல்லமையாளர் விருது’, ‘வேலு நாச்சியார் விருது’, ‘ஐயை சக்தி விருது’ ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இந்தியாவிலிருக்கும் விருதாளர்களுக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘சொற்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றது.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இவ்விழாவில் பங்கேற்க இயலாது என்பதால், மின்னஞ்சல் வழியாக விருதுச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)