TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனீ விருதாளர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

சொற்சுவைத் தேனீ விருதாளர்


திருமதி. வாசுகி நடேசன்

இலங்கை, யாழ்ப்பாணம், சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் ஆசிரியராகவும், யாழ் கல்வியியல் கல்லூரியில் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றி இருக்கும் வாசுகி நடேசன் இளங்கலை, கல்வியியலில் முதுநிலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம் ஆகியவைகளைப் பெற்றிருக்கிறார். தற்போது இத்தாலியிலுள்ள ஜெனோவாவில் வசித்து வரும் இவர், பல்வேறு இதழ்களில் கதை, கவிதை, கட்டுரைகள் என எழுதியிருக்கிறார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கவிதை நிகழ்வு நாடகங்களை எழுதி அரங்கேற்றம் செய்திருக்கிறார். இவை தவிர, கீழ்க்காணும் நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

1. மருதத்திணை (பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களது மேற்பார்வையில் முது தத்துவஞானிப் பட்டத்துக்காக எழுதப்பெற்ற ஆய்வுக் கட்டுரையின் நூல் வடிவம்)

2. உரைநடைத் தெளிவு (தந்தை கலாநிதி க. சொக்கலிங்கம் (சொக்கன்) அவர்களுடன் இணைந்து எழுதியது)

3. கடல் (சிறுகதைகள் மற்றும் குறுநாவல் தொகுப்பு)

இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இந்தியாவிலிருக்கும் விருதாளர்களுக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘சொற்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றது.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இவ்விழாவில் பங்கேற்க இயலாது என்பதால், மின்னஞ்சல் வழியாக விருதுச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)