TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனீ விருதாளர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

சொற்சுவைத் தேனீ விருதாளர்


முனைவர் சீ. வத்சலா

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1970 ஆம் ஆண்டில் வேதியியலில் முதுகலைப்பட்டம், 1984 ஆம் ஆண்டில் கேரள மாநிலம், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர் முப்பது வருடத்திற்கும் மேலாகப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அறிவியல் ஆய்வு இதழ்களில், இவரது 25க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. பேராசிரியர் பணிக்குப் பின்பு, கரித்தூள் சிகிச்சையில் ஆர்வம் கொண்டு, பல்வேறு புதிய நுட்பங்களைக் கண்டறிந்த இவர், பெங்களூர், கித்வாய் நினைவு புற்றுநோய் நிலையத்தில் கரித்தூள் சிகிச்சை வல்லுநராகவும், தன்னார்வ நோய்த் தணிப்புக் கண்காணிப்பாளராகவும் சேவை செய்து வந்தார். ஆங்கில மருத்துவர்களால் கைவிடப்பட்ட சில நோயாளிகளுக்கு கரி, வெள்ளி ஆகியவற்றைப் பயன்படுத்தி, அவர்களது நோயை நீக்கி முழுமையாக நலமடையச் செய்திருக்கிறார். சிலரது நோயின் வலியைக் குறைத்து, அவர்கள் வேதனையைப் போக்கியிருக்கிறார். தற்போது இலண்டனில் வசித்து வரும் இவருக்கு, கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரி உள்ளிட்ட சாதாரண பயன்பாட்டுப் பொருட்களைக் கொண்டு எளிமையான முறையில் சிகிச்சை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையில் பலருக்கும் தனது சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்.

இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இந்தியாவிலிருக்கும் விருதாளர்களுக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘சொற்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றது.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இவ்விழாவில் பங்கேற்க இயலாது என்பதால், மின்னஞ்சல் வழியாக விருதுச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)