TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - பாராட்டிச் சிறப்பு செய்யப் பெற்றவர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

தமிழ்ச்சேவைத் தேனீ விருதாளர்


மு. சு. முத்துக்கமலம்

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த மு. சுப்பிரமணி - தாமரைச்செல்வி இணையருக்கு 21-3-1999 ஆம் ஆண்டில் மகளாகப் பிறந்த மு. சு. முத்துக்கமலம், கணித அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) பட்டயப்படிப்பு, வலைப்பக்க வடிவமைப்பு (Web Design) பட்டயப் படிப்பு, இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் (Journalism and Mass Communication) பட்டயப்படிப்பு ஆகியவைகளையும் முடித்திருக்கிறார். இந்தி மொழியில் ‘பிரவீன் உத்தாரத்’ சான்றிதழ் பெற்றிருக்கிறார். பள்ளியில் படிக்கும் போதேப் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு பரிசுகளைப் பெற்றவர். பள்ளியில் படிக்கும் காலத்தில் இந்திய அஞ்சல் துறை நடத்திய கடிதம் எழுதும் போட்டியில் தேனி மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்றவர். முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக (2020-2022) நடத்தி வந்த “இணைய வழி தமிழியல் உரைகள்” என்னும் தொடர் நிகழ்வில் உரையாளர்களின் படங்களைத் திரைக்காட்சியாகப் பதிவு செய்தல், பங்கேற்பாளர்கள் பட்டியலைத் தயாரித்தல், உரைகளை நிகழ்படமாகப் பதிவு செய்து, வலையொளியில் (youtube) பதிவு செய்தல் போன்ற கணினித் தொழில்நுட்பப் பணிகளைச் செய்திருக்கிறார்.

இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " தமிழ்ச்சேவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தமிழ்ச்சேவைத் தேனீ விருது



தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இவருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘தமிழ்ச்சேவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.


© 2018-2022 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)