TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - பாராட்டிச் சிறப்பு செய்யப் பெற்றவர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

தமிழ்ச்சேவைத் தேனீ விருதாளர்


நெ. நிலவன்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கீழக் கல்கண்டார்கோட்டை என்னும் சிற்றூரில் தி. நெடுஞ்செழியன் – தி. சு. வேலாம்பிகை இணையருக்கு 2000ஆம் ஆண்டு ஆகஸ்டு 16ஆம் நாளில் பிறந்தவர் நெ. நிலவன். திருச்சி தூய வளனார் கல்லூரியில் கணினி அறிவியல் முதுநிலைப் பட்டப்படிப்பில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். சிறு வயதிலிருந்து கணினி அறிவியலில் ஆர்வம் கொண்ட இவர் தொடக்கப்பள்ளியில் படிக்கும் காலத்திலேயேத் தமிழ் ஒருங்குறியில் தட்டச்சு செய்யும் அனுபவம் கொண்டவர். கணினியில் குறுஞ்செயலிகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருச்சி மாவட்டம் நடத்திய இணைய வழி உரையில், “இணையத்தில் பாதுகாப்பாக உலவுவது எப்படி” என்று உரை நிகழ்த்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் “கோயில்களும் சுற்றுச்சூழலும்” என்னும் பன்னாட்டு கருத்தரங்க நிகழ்வில், இணையம் வழி, அயல்நாட்டுப் பேராளர்களின் உரையை ஒருங்கிணைத்து, கருத்தரங்க நிகழ்வில் காணொளியாக ஒளிபரப்பி, பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் மேனாள் இயக்குநர் பாஸ்கரன் அவர்களின் பாராட்டைப் பெற்றவர்.

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக (2020-2022) நடத்தி வந்த “இணைய வழி தமிழியல் உரைகள்” என்னும் தொடர் நிகழ்வுக்குத் தேவையான கணினி தொழில்நுட்ப உதவிகளைச் செய்து கொடுத்து உதவியிருக்கிறார்.

இவருக்குத் தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து “தமிழ்ச்சேவைத் தேனீ” எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.

தமிழ்ச்சேவைத் தேனீ விருது



தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இவருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘தமிழ்ச்சேவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.


© 2018-2022 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)