TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனீ விருதாளர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

தமிழ்ச்சுவைத் தேனீ விருதாளர்


ஜா. ஜூலி பிரதிபா

மதுரை மாநகரில் த. ஜான் காசிராஜன் - ஜெ. ஷீபா வாணி ஆகியோரின் இரண்டாவது புதல்வியான ஜா. ஜூலி பிரதிபா, 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர். பி. கு. ராஜன் பாபுவை மணாளனாகக் கொண்ட இவருக்கு ஜெபஸ், ஜேன் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

தமது பள்ளிப்படிப்பைக் கேப்ரன் ஹால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பை மதுரையிலுள்ள டோக் பெருமாட்டி கல்லூரியில் முடித்தார். இளங்கலை கல்வியியல் கல்வியைச் சென்னையிலுள்ள வெல்லிங்டன் கல்வியியல் கல்லூரியிலும், ஆய்வியல் நிறைஞர் கல்வியை மதுரை பாத்திமா கல்லூரியிலும் பயின்றார். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் 'திரு.வி.க.வின் எழுத்தாளுமை' எனும் தலைப்பில் முனைவர் மூ. தமிழரசி அவர்களின் நெறியாளுகையின் கீழ் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தினை உயர்தர மதிப்பீட்டுடன் பெற்றவர். கல்வெட்டியலில் சான்றிதழ் படிப்பையும் முடித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு முதல் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி, தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். அறுபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் அறக்கட்டளைத் தொடர் சொற்பொழிவுகளில் உரையாற்றியுள்ளார். 2007 ஆம் ஆண்டு முதல் ஆற்றுப்படுத்தும் மையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகின்றார். டோக் பெருமாட்டி கல்லூரியில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) பதிவேற்றம் செய்யும் பணியினை 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செய்து வருகின்றார்.

இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " தமிழ்ச்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தமிழ்ச்சுவைத் தேனீ விருது



தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இவருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘தமிழ்ச்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.



© 2018-2022 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)