TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனீ விருதாளர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

தமிழ்ச்சுவைத் தேனீ விருதாளர்


முனைவர் ப. கவிதா

1982 ஆம் ஆண்டு மே திங்கள் 10 ஆம் நாளில் கடலூரைச் சார்ந்த கி. பழனி - ப. மல்லிகா இணையர்களுக்கு மகளாகப் பிறந்த இவர் சு. செந்தில்குமார் என்பவரை வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். இவருக்கு செ. ஷிவானி எனும் மகள் இருக்கிறார். தனது பள்ளிப்படிப்பை கடலூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், இளங்கலைத் தமிழ்ப் பட்டப்படிப்பைக் கடலூர், சி. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியிலும், முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை சிதம்பரம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டப்படிப்பை தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி வழியாக மொழியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். ‘கம்பராமாயணத்தில் கதைமாந்தர்கள்’ என்னும் தலைப்பின் கீழ் தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் வ. குருநாதன் அவர்களின் நெறியாளுகையின் கீழ் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு, பட்டத்தினைப் பெற்றார்.

கடலூர், சி. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் (2011 – 2014) ஆம் ஆண்டில் காலை நேரக் கல்லூரியில் விருந்தினர் விரிவுரையாளராகப் பணியாற்றி, பின் (2015 – 2022) இதேக் கல்லூரியில் மாலை நேரக் கல்லூரியின், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மாலைநேரக்கல்லூரி, முதுகலைத் தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியராகவும் தம் பணியாற்றி வருகிறார். முதுகலைத் தமிழ் சார்ந்த மாணவிகளுக்கு பங்கீட்டின் படி ஆய்வு நெறியாளராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " தமிழ்ச்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தமிழ்ச்சுவைத் தேனீ விருது


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இவருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘தமிழ்ச்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.



© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)