இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள்
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள் - 118

நீரிழிவு ஓர் விழிப்புணர்வு - உரை


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து நடத்தி வரும் “இணைய வழியிலான தமிழியல் உரை மற்றும் கலந்துரையாடல்” நிகழ்வில், உலக நீரிழிவு நாளை (நவம்பர், 14) முன்னிட்டு, 14-11-2021, ஞாயிற்றுக்கிழமையன்று, காஞ்சிபுரம், லைஃப் கேர் பன்முக சிறப்பு மருத்துவமனை, மருத்துவ இயக்குனர், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் மற்றும் பாண்டிச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி, இணைப்பேராசிரியர் மருத்துவர் அன்புச்செல்வன் திருமார்பன் அவர்களது “நீரிழிவு ஓர் விழிப்புணர்வு” எனும் உரை இடம் பெற்றது. இந்நிகழ்வில், இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் நிகழ்வை நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி செய்திருந்தார்.

இவ்வுரையினை வலையொளியில் (You Tube) காணக் கீழ்க்காணும் இணைப்பிற்குச் செல்லலாம்.

https://youtu.be/XVtJAHDgLPg