இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள் |
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து வழங்கிய இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள் - 122 பெரியபுராணம் காட்டும் சமுதாய நோக்கம் - உரை தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து நடத்தி வரும் “இணைய வழியிலான தமிழியல் உரை மற்றும் கலந்துரையாடல்” நிகழ்வில், 12-12-2021, ஞாயிற்றுக்கிழமையன்று கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் தேர்வாணையர், முனைவர் க. முருகேசன் அவர்களது “பெரியபுராணம் காட்டும் சமுதாய நோக்கம்” எனும் தலைப்பிலான உரை இடம் பெற்றது. இந்நிகழ்வில், இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் நிகழ்வை நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி செய்திருந்தார். காரைக்குடி, பழ. பாஸ்கரன் நன்றி கூறினார்.
|