இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள் |
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து வழங்கிய இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள் - 130 கிராமியப் பாடல்களில் வேளாண்மை - உரை தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து நடத்தி வரும் “இணைய வழியிலான தமிழியல் உரை மற்றும் கலந்துரையாடல்” நிகழ்வில், 6-2-2022, ஞாயிற்றுக்கிழமையன்று தூத்துக்குடி, வ. உ. சிதம்பரம் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் மா. முத்துசாமி அவர்களது “கிராமியப் பாடல்களில் வேளாண்மை” எனும் தலைப்பில் கிராமியப் பாடல்களுடன் உரை இடம் பெற்றது. இந்நிகழ்வில், இந்தியா, இலங்கை, மலேசியா, நியூசிலாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் நிகழ்வை நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி செய்திருந்தார். https://youtu.be/kzKRLBnN1sw |