TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள்
http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள்
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள் - 28

பட்டிமன்றம்


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 17-5-2020, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு நடத்திய இணைய வழியிலான நிகழ்வில், “இன்றைய நாகரீகச் சமூகத்திற்கு கொரோனா நோய் பரவல் பாடமே! பாதகமே!” எனும் தலைப்பிலான பட்டிமன்றம் நடைபெற்றது. இப்பட்டிமன்றத்துக்கு, மதுரை முனைவர் மா. துரை (எ) கவிஞர் மதுரன் நடுவராக இருந்தார். பாடமே எனும் அணியில், இராயப்பன்பட்டி, முதுகலைத் தமிழாசிரியர், முனைவர் யாழ் ராகவன் மற்றும் தேனி மாவட்டம், வீரபாண்டி, தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர் திருமதி மு. ரேணுகாதேவி ஆகியோரும், பாதகமே அணியில், சின்னமனூர், தமிழாசிரியர் திரு ஆ. முத்துக்குமார் மற்றும் தேனி மாவட்டம், வீரபாண்டி, தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர் செல்வி கு. சுவாதி ஆகியோரும் பேசினர். நடுவர் முனைவர் மா. துரை (எ) கவிஞர் மதுரன் முடிவில் இன்றைய நாகரீகச் சமூகத்திற்கு கொரோனா நோய் பரவல் பாதகமாக இருந்தாலும், பாடமே என்று தீர்ப்பு வழங்கினார். இப்பட்டிமன்ற நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, நார்வே, சுவிட்சர்லாந்து, இலண்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் நிகழ்வை நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி செய்திருந்தார்.

© 2018-2020 தேனித்தமிழ்ச்சங்கம்.ஆர்க் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)