இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள்
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள் - 32

முன்னேற்றம் தரும் நேர மேலாண்மை


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 21-5-2020, வியாழக்கிழமை, மாலை 5.00 மணிக்கு நடத்திய இணைய வழியிலான நிகழ்வில், தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் மு. அப்துல் காதர் அவர்கள் முன்னேற்றம் தரும் நேர மேலாண்மை எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, நார்வே, சுவிட்சர்லாந்து, இலண்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் நிகழ்வை நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி செய்திருந்தார்.