TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
நாகப்பட்டினம், அ. துரைசாமி நாடார் மரகதவள்ளியம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி),

தேனித் தமிழ்ச் சங்கம்

மற்றும்

சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 1

இணைய வழியிலான உரையரங்கம்


நாகப்பட்டினம், அ. துரைசாமி நாடார் மரகதவள்ளியம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, 20-5-2020, புதன்கிழமை, மதியம் 2.00 மணிக்கு இணைய வழியில் நடத்திய இணைய வழியிலான உரையரங்கம் சிறப்பு நிகழ்விற்கு, நாகப்பட்டினம், அ. துரைசாமி நாடார் மரகதவள்ளியம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), முதல்வர் முனைவர் இல. மேகலா அவர்கள் தலைமையுரையாற்றினார். இந்த உரையரங்க நிகழ்வில் தேனி மாவட்டம், காவலர் நிறைவாழ்வுப் பயிற்சித் திட்ட முதன்மைப் பயிற்சியாளர் திருமதி அ. சபானா பர்வீன் அவர்கள் இணையத்தில் பாதுகாப்பாக உலாவுவது எப்படி? எனும் தலைப்பிலும், முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் ஆசிரியரும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் இணையத் தேடுபொறிகள் எனும் தலைப்பிலும், திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி, தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் (பணி நிறைவு) முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் டீம்லிங்க் செயலி மூலம் காணொலி நிகழ்வுகள் எனும் தலைப்பிலும் உரைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு நாகப்பட்டினம், அ. துரைசாமி நாடார் மரகதவள்ளியம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தெ. வாசுகி அவர்கள் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார்.

© 2018-2020 தேனித்தமிழ்ச்சங்கம்.ஆர்க் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)