TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
தேனித் தமிழ்ச் சங்கம்

மற்றும்

சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 10

பொங்கல் திருநாள் - சிறப்பு வழக்காடு மன்றம்


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, 14-1-2021 முதல் 16-1-2021 வரையிலான மூன்று நாட்கள் பொங்கல் திருநாள், திருவள்ளுவர் நாள் மற்றும் உழவர் திருநாள் சிறப்பு நிகழ்வுகளை இணைய வழியில் வழங்கிட ஏற்பாடு செய்திருந்தது.

இம்மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்வில், பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்வாக, 14-1-2021, வியாழக்கிழமை, மாலை 5.00 மணிக்கு தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவரும், பட்டிமன்றப் பேச்சாளருமான முனைவர் பெரிய முருகன் அவர்களை நடுவராகக் கொண்டு, பண்பாட்டு விழாக்களில் இளைஞர்களுக்கு ஆர்வமில்லை எனும் தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. காரைக்குடி, மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர், திரு பழ. பாஸ்கரன் அவர்கள் வழக்கினைத் தொடுக்க, சென்னை, ஸ்ரீ சேஷாத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், சென்னை, ரெயின்போ வானொலி அறிவிப்பாளருமான திருமதி ரேகா மணி அவர்கள் வழக்கினை மறுத்தும் பேசினர். நடுவர் முனைவர் பெரிய முருகன்,“பெற்றோர்களும் பெரியவர்களும் பண்பாட்டு விழாக்களில் இளைஞர்களுக்கு ஆர்வத்தை அதிகரிப்பதுடன், அதனை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க முன் வர வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கினார்.

இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் நெறியாளுகை செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார்.

இவ்வழக்காடு மன்றத்தினை வலையொளியில் (You Tube) காணக் கீழ்க்காணும் இணைப்பிற்குச் செல்லலாம்.

https://youtu.be/uw82xszMIUQ


© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)