TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை,

தேனித் தமிழ்ச் சங்கம்

மற்றும்

சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 12

உலகத் தாய்மொழி நாள் - திராவிட மொழிகளின் சிறப்புகள் - ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்


உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து உலகத் தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்வாக, 22-2-2021 திங்கள் கிழமையன்று காலை 10.00 மணிக்கு கல்லூரியின் நிறுவனர் நினைவரங்கத்தில், திராவிட மொழிகளின் சிறப்புகள் எனும் பொருண்மையிலான இணைய வழியிலான தேசியக் கருத்தரங்கத்தினை நடத்தின.

கல்லூரியின் நிறுவனர் நினைவரங்கத்தில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்விற்கு உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி) செயலாளர் மற்றும் தாளாளர் ஹாஜி தர்வேஷ் முகைதீன் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் ஆட்சிமன்றக் குழுத்தலைவர் ஜனாப் எஸ். செந்தால் மீரான் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ஹாஜி முனைவர் ஹெச். முகமது மீரான் அவர்கள் தொடக்க உரையாற்றினார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி, கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மு. அப்துல்காதர், தேனித் தமிழ்ச் சங்கத்தின் நிருவாகக்குழு உறுப்பினர் பெரியகுளம், நேசம் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


திராவிட மொழிகளின் சிறப்புகள் எனும் பொருண்மையிலான, இணைய வழியிலான தேசியக் கருத்தரங்க நிகழ்வில், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்கள் தமிழ் மொழியின் சிறப்புகள் எனும் தலைப்பிலும், ஆந்திரப்பிரதேசம் மாநிலம், குப்பம், திராவிடன் பல்கலைக்கழகம், மொழி கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஜெ.வி. சத்தியவாணி அவர்கள் தெலுங்கு மொழியின் சிறப்புகள் எனும் தலைப்பிலும், கர்நாடகா மாநிலம், பெங்களூர், பிரசிடென்சி பல்கலைக்கழகம், கன்னட மொழித்துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் க. மலர்விழி அவர்கள் கன்னட மொழியின் சிறப்புகள் எனும் தலைப்பிலும், கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர், அரசுக் கல்லூரி, தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம், துணைப்பேராசிரியர் முனைவர் அ. விஜயன் அவர்கள் மலையாள மொழியின் சிறப்புகள் எனும் தலைப்பிலும், ஆந்திரப்பிரதேசம் மாநிலம், குப்பம், திராவிடன் பல்கலைக்கழகம், துளு மொழித்துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ப. ச. சிவக்குமார் அவர்கள் துளு மொழியின் சிறப்புகள் எனும் தலைப்பிலும் சிறப்புரைகளை வழங்கினர்.

திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவரும், திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி, தமிழ்த்துறையில் பணி நிறைவு பெற்ற இணைப்பேராசிரியருமான முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் இக்கருத்தரங்க நிகழ்வினை முழுமையாக நெறியாளுகை செய்தார்.


கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்லூரியின் நிறுவனர் நினைவரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த திரையில் இணைய வழியிலான சிறப்பு உரை நிகழ்வுகளைக் கண்டு மகிழ்வுற்றனர். இணைய வழியிலான இப்பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்வில், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஹாங்காங், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முடிவில், தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் கூடலூர் இரா. முருகேசன் நன்றியுரை வழங்கினார்.


இப்பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்விற்கு உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார்.

இந்நிகழ்வினை வலையொளியில் (You Tube) காணக் கீழ்க்காணும் இணைப்புகளுக்குச் செல்லலாம்.


1. சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்களது “தமிழ் மொழியின் சிறப்புகள்” உரை

https://youtu.be/90q3ziQIS18

2. ஆந்திரப்பிரதேசம் மாநிலம், குப்பம், திராவிடன் பல்கலைக்கழகம், மொழி கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஜெ.வி. சத்தியவாணி அவர்களது “தெலுங்கு மொழியின் சிறப்புகள்” உரை

https://youtu.be/aKQcxtSjm-c

3. கர்நாடகா மாநிலம், பெங்களூர், பிரசிடென்சி பல்கலைக்கழகம், கன்னட மொழித்துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் க. மலர்விழி அவர்களது “கன்னட மொழியின் சிறப்புகள்” உரை.

https://youtu.be/2kAOFgBePEM

4. கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர், அரசுக் கல்லூரி, தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம், துணைப்பேராசிரியர் முனைவர் அ. விஜயன் அவர்களது “மலையாள மொழியின் சிறப்புகள்” உரை

https://youtu.be/PYIIMYeKSkY

5. ஆந்திரப்பிரதேசம் மாநிலம், குப்பம், திராவிடன் பல்கலைக்கழகம், துளு மொழித்துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ப. ச. சிவக்குமார் அவர்களது “துளு மொழியின் சிறப்புகள்” உரை

https://youtu.be/8txwkb4xCO4


© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)