TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
சென்னை, பெரம்பூர், செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி,

தேனித் தமிழ்ச் சங்கம்

மற்றும்

சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 13

உலக மகளிர் நாள் - பெண்மையைப் போற்றுவோம் - ஐந்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்


சென்னை, பெரம்பூர், செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து உலக மகளிர் நாள் சிறப்பு நிகழ்வாக, 4-3-2021 முதல் 8-3-2021 வரை ஐந்து நாட்கள் பெண்மையைப் போற்றுவோம்! எனும் பொருண்மையிலான இணைய வழியிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்தின.

இக்கருத்தரங்கத்திற்கு, சென்னை, பெரம்பூர், செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். ஸ்ரீதேவி அவர்கள் தலைமையுரையாற்றினார். சென்னை, பெரம்பூர், செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஆர். மீனாட்சி அவர்களும், தேனி மாவட்டம், வீரபாண்டி, தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியரும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளருமான திருமதி மு. ரேணுகாதேவி அவர்களும் முன்னிலையுரையாற்றினர். முன்னதாக, சென்னை, பெரம்பூர், செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் மொழித்துறைத் தலைவர் முனைவர் க. பிரீத்தா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்வில், 4-3-2021, வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு, ஹாங்காங், ஸ்கோப் சிட்டி பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளரும், அகம் சொல்யூசன்ஸ் ஹாங்காங் நிறுவனத்தின் இயக்குநருமான முனைவர் சித்ரா சிவக்குமார் அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க பெண்கள் எனும் தலைப்பிலும், 5-3-2021, வெள்ளி கிழமை, மாலை 5.00 மணிக்கு, இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவகம், விரிவுரையாளர் செல்வி ஐஸ்வர்யா கணேசன் அவர்கள் ஈழத்து இசை மரபில் பெண்கள் எனும் தலைப்பிலும், 6-3-2021, சனிக்கிழமை, மாலை 5.00 மணிக்கு, இலங்கை, யாழ்ப்பாணம், சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மேனாள் ஆசிரியரும், தற்போது புலம் பெயர்ந்து இத்தாலியில் வசித்து வருபவருமான திருமதி வாசுகி நடேசன் அவர்கள் புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழ்ப் பெண்கள் எனும் தலைப்பிலும், 7-3-2021, ஞாயிற்றுக் கிழமை, மாலை 5.00 மணிக்கு, தென்காசி மாவட்டம், கடையநல்லூர், அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பா. வேலம்மாள் அவர்கள் சங்க இலக்கியத்தில் பெண்கள் எனும் தலைப்பிலும், 8-3-2021, திங்கள் கிழமை, மாலை 5.00 மணிக்கு, சிவகங்கை மாவட்டம், கோவிலூர், நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கணினித்துறைத் தலைவர் முனைவர் க. கலா காசிநாதன் அவர்கள் அறிவியலில் சாதித்த பெண்கள் எனும் தலைப்பிலும் சிறப்புரைகளை வழங்கினர்.

திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவரும், திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி, தமிழ்த்துறையில் பணி நிறைவு பெற்ற இணைப்பேராசிரியருமான முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் இக்கருத்தரங்க நிகழ்வினை முழுமையாக நெறியாளுகை செய்தார்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஹாங்காங், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்விற்கு சென்னை, பெரம்பூர், செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் மொழித்துறைத் தலைவர் முனைவர் க. பிரீத்தா அவர்கள் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார்.


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)