TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
புதுச்சேரி கவிஞரேறு வாணிதாசனார் கலை இலக்கியப் பேரவை,

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 16

கவிஞரேறு வாணிதாசன் 106வது பிறந்தநாள் உரையரங்கம்


புதுச்சேரி கவிஞரேறு வாணிதாசனார் கலை இலக்கியப் பேரவை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, கவிஞரேறு வாணிதாசன் பிறந்தநாளை (ஜூலை 22) முன்னிட்டு, 21-7-2021 புதன்கிழமையன்று இணைய வழியில் நடைபெற்ற கவிஞரேறு வாணிதாசன் 106-வது பிறந்தநாள் உரையரங்கத்தில் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் வரவேற்புரையாற்றி நிகழ்வை நெறிப்படுத்தினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சு. சி. பொன்முடி அவர்கள் தலைமையுரையும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் முன்னிலையுரையும் வழங்கினர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர், அரசுக்கல்லூரி, தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையத்தின் துணைப்பேராசிரியர் முனைவர் அ. விஜயன் அவர்கள், “வாணிதாசனின் குழந்தை இலக்கியம்” எனும் தலைப்பிலும், பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர் முனைவர் தே. ராஜசீலி அவர்கள், “வாணிதாசனின் பன்னோக்குச் சிந்தனைகள்” எனும் தலைப்பிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச்செயலாளர், திருநெல்வேலி எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் அவர்கள், “வாணிதாசன் கவிதைகள்” எனும் தலைப்பிலும் உரைகளை வழங்கினர்.

புதுச்சேரி, கவிஞரேறு வாணிதாசனார் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் நல்லாசிரியர் வளர்மதி முருகன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வின் இறுதியில், கவிஞரேறு வாணிதாசன் அவர்களது மகள் திருமதி ஐயை பொன்னுசாமி அவர்கள் மனமகிழ்வுடன் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்தியா மட்டுமின்றி, இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார்.


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)