TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 17
உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, தமிழ்த்துறை,

பிரான்சு முத்தமிழ்ச் சங்கம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வு

பாவேந்தரின் கவிதைக்களமும் கருத்துப் புலப்பாடும் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

        

உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, தமிழ்த்துறை, பிரான்சு முத்தமிழ்ச் சங்கம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து பாரதிதாசன் 130-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 7-4-2021, வியாழக்கிழமையன்று “பாவேந்தரின் கவிதைக்களமும் கருத்துப் புலப்பாடும்” எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்தியது.


கல்லூரி முதல்வர் முனைவர் ஹாஜி ஹெச். முகமது மீரான் அவர்கள்

இதற்கான தொடக்க விழா காலை 10.30 மணிக்கு கல்லூரியின் நிறுவனர் நினவு அரங்கத்தில் நடைபெற்றது. இத்தொடக்க விழா நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹாஜி ஹெச். முகமது மீரன் அவர்கள் தலைமையேற்று, கருத்தரங்கத்திற்கான தொடக்க உரையாற்றினார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி, செயலாளர் சு.சி. பொன்முடி, துணைச்செயலாளர் இரா. முருகேசன், கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மு. அப்துல்காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பிரான்சு முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு ஜெயராமன் கோவிந்தசாமி, செயலாளர் தமிழியக்கன் தேவகுமாரன் ஆகியோர் இணைய வழியில் வாழ்த்துரை வழங்கினர்.


கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் அவர்கள்

இந்நிகழ்வில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் A++ நிலையினைப் பெற்றதற்காகக் கல்லூரி நிருவாகத்திற்கும், முதல்வர் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


தேனித் தமிழ்ச் சங்கச் செயலாளர் திரு சு.சி. பொன்முடி அவர்கள்

உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் பிரான்சு முத்தமிழ்ச் சங்கம் இடையில் கல்வி மற்றும் கலை, இலக்கியம், பண்பாடு, ஆராய்ச்சி சார் பரிமாற்றங்கள் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கான ஆவணங்களைக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹாஜி ஹெச். முகமது மீரான் அவர்களும், பிரான்சு முத்தமிழ்ச் சங்கத்திற்காகப் போடிநாயக்கனூர், எழுத்தாளர் ந. முத்துவிஜயன் அவர்களும் பரிமாற்றம் செய்து கொண்டனர்.


புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம்

அதனைத் தொடர்ந்து, “பாவேந்தரின் கவிதைக்களமும் கருத்துப் புலப்பாடும்” எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் இணைய வழியில் நடைபெற்றது.

இக்கருத்தரங்க நிகழ்வுக்கு முன்பாக, பாவேந்தர் பாரதிதாசனாரின் பெயரன் கோ. செல்வம் அவர்கள் வாழ்த்துக் கவிதை ஒன்றை வழங்கினார்.

முற்பகல் நடைபெற்ற முதல் அமர்வில்,

1. கடலூர், முதுமுனைவர், புலவர் கதிர் முத்தையனார் அவர்கள் - பாவேந்தரின் பைந்தமிழ் முழக்கம்

2. பிரான்சு, இசைக்கலைஞர் சம்பத் எதுவார் அவர்கள் - பாவேந்தரின் இசைத்தமிழ் இன்பம்

3. பிரான்சு புலவர் பொன்னரசு அவர்கள் - பாவேந்தரின் கண்ணகிக் காப்பியம் (கவிதை)

எனும் தலைப்புகளிலும்

பிற்பகல் நடைபெற்ற இரண்டாம் அமர்வில்

4. பிரான்சு, திரு அப்துல் தயூப் அவர்கள் - பாவேந்தரின் வீர முழக்கம்

5. புதுச்சேரி, புதுவைப் பல்கலைக் கழகச் சமுதாயக் கல்லூரி, உதவிப்பேராசிரியர் முனைவர் அ. லட்சுமி தத்தை அவர்கள் - மனித உரிமைகளுக்கான பாவேந்தரின் குரல்

6. பிரான்சு, வழக்குரைஞர் ஐ. குணசேகரன் அவர்கள் - பாவேந்தரின் பகுத்தறிவு புரட்சி

எனும் தலைப்புகளிலும் கருத்துரைகளை வழங்கினர்.

இணைய வழியில் நடைபெற்ற இக்கருத்தரங்க நிகழ்வினை திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி, தமிழ்த்துறை, இணைப்பேராசிரியர் (பணி நிறைவு) மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் நெறியாளுகை செய்து ஒருங்கிணைத்தார். பிரான்சு முத்தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு தமிழியக்கன் தேவகுமாரன் வாழ்த்துரையினை வழங்கினார்.


நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்ற கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்

நிறைவாக, கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திரு எம். பிலால் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார்.

இந்நிகழ்வினை வலையொளியில் (You Tube) காணக் கீழ்க்காணும் இணைப்புகளுக்குச் செல்லலாம்.


1. பாவேந்தர் பாரதிதாசனாரின் பெயரன் கோ. செல்வம் அவர்கள் வாழ்த்துக் கவிதை

https://youtu.be/0dfrXFBODs0

2. கடலூர், முதுமுனைவர், புலவர் கதிர் முத்தையனார் அவர்களது “பாவேந்தரின் பைந்தமிழ் முழக்கம்” உரை

https://youtu.be/EGakDFGIWA4

3. பிரான்சு, இசைக்கலைஞர் சம்பத் எதுவார் அவர்களது “பாவேந்தரின் இசைத்தமிழ் இன்பம்” உரை

https://youtu.be/d6I3SBT6d9g

4. பிரான்சு புலவர் பொன்னரசு அவர்கள் - பாவேந்தரின் கண்ணகிக் காப்பியம் (கவிதை)

https://youtu.be/l7IrlsL9CCw

5. பிரான்சு, திரு அப்துல் தயூப் அவர்களது “பாவேந்தரின் வீர முழக்கம்” உரை

https://youtu.be/LPybufTmpZE

6. புதுச்சேரி, புதுவைப் பல்கலைக் கழகச் சமுதாயக் கல்லூரி, உதவிப்பேராசிரியர் முனைவர் அ. லட்சுமி தத்தை அவர்கள் - மனித உரிமைகளுக்கான பாவேந்தரின் குரல்

https://youtu.be/ozF3XR0RF2s

7. பிரான்சு, வழக்குரைஞர் ஐ. குணசேகரன் அவர்கள் - பாவேந்தரின் பகுத்தறிவு புரட்சி

https://youtu.be/YRW7h62MLo4

8. பிரான்சு முத்தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு தமிழியக்கன் தேவகுமாரன் அவர்களது வாழ்த்துரை

https://youtu.be/4b9S2P4XbD8


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)