TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை,

தேனித் தமிழ்ச் சங்கம்

மற்றும்

சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 2

வளர்தமிழ் இலக்கியங்களில் பன்முகப் பார்வை - பன்னாட்டு வலையரங்கக் கருத்துரையாடல்


உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, 16-6-2020 முதல் 20-6-2020 வரை ஐந்து நாட்கள் மாலை 4.00 மணிக்கு இணைய வழியில் நடத்திய, வளர்தமிழ் இலக்கியங்களில் பன்முகப் பார்வை எனும் பொருண்மையிலான பன்னாட்டு வலையரங்கக் கருத்துரையாடல் சிறப்பு நிகழ்விற்கு, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெரிய முருகன் அவர்கள் தலைமையுரையாற்றினார். உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), முதல்வர் ஹாஜி முனைவர் எச். முகமது மீரான் அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

16-6-2020, செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில் அமெரிக்கா, தமிழ் அநிதம் தலைவர் திருமதி சுகந்தி நாடார் அவர்கள் தமிழ் மின் நூலகங்கள் எனும் தலைப்பிலும், 17-6-2020, புதன் கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் சிவகங்கை மாவட்டம், கோவிலூர், நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கணினியியல்துறைத் தலைவர் முனைவர் க. கலா காசிநாதன் அவர்கள் செயற்கை நுண்ணறிவும் இயந்திரக் கற்றலும் எனும் தலைப்பிலும், 18-6-2020, வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற மூன்றாம் நாள் நிகழ்வில் பெங்களூர், பிரசிடென்சி பல்கலைக்கழகம், கன்னட மொழித்துறைத் தலைவர் முனைவர் க. மலர்விழி அவர்கள் புதுமைப்பித்தன் - மாஸ்தி சிறுகதைகள் ஒப்பீட்டுப் பார்வை எனும் தலைப்பிலும், 19-6-2020, வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற நான்காம் நாள் நிகழ்வில் மதுரை, மதுரைக் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர் முனைவர் என். ரத்தினக்குமார் அவர்கள் சூழலியற்சார் கதைகள்: வாசித்தலும் எழுதுதலும் எனும் தலைப்பிலும், 20-6-2020, சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற ஐந்தாம் நாள் நிகழ்வில் இலண்டன், மேற்குத் தமிழ்ப் பாடசாலை, முதல்வர் திரு வேணுகோபாலன் அருணாச்சலம் அவர்கள் வளரும் சமுதாயத்திற்கு வழிகாட்டத் தவறியவர்கள் எனும் தலைப்பிலும் சிறப்புரைகளை வழங்கினர். இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, அமெரிக்கா, இலண்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு, திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவரும், திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி, தமிழ்த்துறையில் பணி நிறைவு பெற்ற இணைப்பேராசிரியருமான முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்களும், உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர் முனைவர் மு. அப்துல்காதர் அவர்களும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்களும் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார்.


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)