TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
தேனித் தமிழ்ச் சங்கம்,

காரைக்குடி, வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம்

மற்றும்

யுகன் மின் வெளிக்காட்சி

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 9

வீறுகவியரசர் நூற்றாண்டு பட்டிமண்டபம்


தேனித் தமிழ்ச் சங்கம், காரைக்குடி, வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் மற்றும் யுகன் மின் வெளிக்காட்சி இணைந்து, வீறுகவியரசர் நூற்றாண்டினை முன்னிட்டு, வீறுகவியரசர் பாடல்களில் விஞ்சி நிற்பது குமுகாயச் சிந்தனையா?தாய்மொழிப் பற்றா? எனும் தலைப்பிலான சிறப்புப் பட்டிமண்டபத்தை இணைய வழியில் வழங்கிட ஏற்பாடு செய்திருந்தது.

3-10-2020, சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற இச்சிறப்புப் பட்டிமண்டப நிகழ்வுக்கு, காரைக்குடி, வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் செயலாளர், முனைவர் தமிழ் முடியரசன் வரவேற்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார். திருச்சி, தூய வளனார் கல்லூரி, உதவிப்பேராசிரியரும், யுகன் மின்வெளிக் காட்சி செயல் இயக்குநருமான முனைவர் ஜா. சலேத் (யாழ் ஆதன்) அவர்கள் முன்னிலையுரையாற்றினார்.

தேவகோட்டை, சேவுகன் அண்ணாமலை கலை அறிவியல் கல்லூரி, உதவிப்பேராசிரியர், நற்றமிழ் நாயகர், முனைவர் பாகை, கண்ணதாசன் அவர்களை நடுவராகக் கொண்டு, வீறுகவியரசர் பாடல்களில் விஞ்சி நிற்பது குமுகாயச் சிந்தனையா?தாய்மொழிப் பற்றா? எனும் தலைப்பில் நடைபெற்ற இப்பட்டிமன்றத்தில், குமுகாயச் சிந்தன்னையே! எனும் அணியில் காரைக்குடி, திரு பழ. பாசுகரன், திருச்சி செல்வன். தனராசு மற்றும் கிருட்டிணகிரி சாதனைப்பெண், செல்வி. ஆசிகா ஆகியோரும், தாய்மொழிப் பற்றே! எனும் அணியில் தேவகோட்டை, தலைமையாசிரியை மு. சோதி சுந்தரேசன், கோட்டையூர், செல்வி. அழகு மீனாண் தேவகோட்டை, இளம் நாவரசு செல்வன். யோகேசுகுமார் ஆகியோரும் பேசினர்.

பட்டிமண்டபத்தின் நிறைவில் தேனி மாவட்டம், வீர்பாண்டி, தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியரும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளருமான திருமதி மு. ரேணுகாதேவி நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி மற்றும் காரைக்குடி, வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் செயலாளர், முனைவர் தமிழ் முடியரசன் ஆகியோர் செய்திருந்தனர்.


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)