|
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.
|
|
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019 |
படங்கள் |

தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியிலுள்ள கல்லூரி நிறுவனர் நினைவரங்கில் 23-10-2019, புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு நடைபெற்ற கம்பம் பள்ளத்தாக்கு இலக்கியக் காப்பகம் (Centre for the Preservation of Cumbum Valley Literatures) தொடக்க விழா நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் ஹாஜி. முனைவர் எச். முகமது மீரான் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் ஜனாப். எஸ். செந்தல் மீரான், கல்லூரியின் செயலாளர் & தாளாளர் ஹாஜி எம். தர்வேஷ் முகைதீன், தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மு. அப்துல்காதர் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி தமிழ்த்துறைக்கும், தேனித் தமிழ்ச் சங்கத்திற்கும் இடையிலான கல்வி மற்றும் கலை, இலக்கியம், பண்பாடு ஆராய்ச்சி சார் பரிமாற்றங்கள், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான, புரிந்துணர்வு அடிப்படையிலான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதற்கான ஆவணங்களைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மு.அ. சமது மற்றும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி ஆகியோர் பரிமாற்றம் செய்து கொண்டனர். தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சு.சி. பொன்முடி தொடக்க உரையாற்றினார்.
தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (23-10-2019) படங்கள்
|
© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது ![]() முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com) (ISSN: 2454-1990)
|

















