TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம், பெரம்பலூர், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை - புரிந்துணர்வு ஒப்பந்தம் (28-4-2022)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

படங்கள்

பெரம்பலூர், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் 28-4-2022, வியாழக்கிழமை, காலை 10.00 மணிக்கு நடைபெற்ற, பைந்தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா, பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, புரிந்துணர்வு ஒப்பந்தம் விழா எனும் மூன்று விழாக்களை உள்ளடக்கிய முப்பெரும் விழா நிகழ்விற்குத் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் மரியாதைக்குரிய அ. சீனிவாசன் அவர்கள் தலைமை வகித்தார். இவ்விழாவில் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைக்கும், தேனித் தமிழ்ச் சங்கத்திற்கும் இடையிலான கல்வி மற்றும் கலை, இலக்கியம், பண்பாடு ஆராய்ச்சி சார் பரிமாற்றங்கள், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான, புரிந்துணர்வு அடிப்படையிலான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரியின் சார்பில், கல்லூரி முதல்வர் முனைவர் நா. வெற்றிவேலன் அவர்களும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தலைவர் தேனி மு. சுப்பிரமணி மற்றும் செயலாளர் சு. சி. பொன்முடி ஆகியோர் கையொப்பமிட்டனர். அதன் பின்னர், ஆவணங்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன.

தேனித் தமிழ்ச் சங்கம், பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை - புரிந்துணர்வு ஒப்பந்தம் (28-4-2022) - படங்கள்

        

தேனித் தமிழ்ச் சங்கம், பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை - புரிந்துணர்வு ஒப்பந்தம் - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 2
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் உயர்திரு அ. சீனிவாசன் ஐயா அவர்களுக்குப் பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்தல்
புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 3
சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் நா. வெற்றிவேலன் அவர்கள் வாழ்த்துரை
புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 4
பல்கலைக்கழக வேந்தர் உயர்திரு அ. சீனிவாசன் அவர்கள், திரு தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்குப் பயனாடை அணிவித்தல்
புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 5
பல்கலைக்கழக வேந்தர் உயர்திரு அ. சீனிவாசன் அவர்கள், திரு தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்கு நினைவுப் பரிசு அளித்தல்
புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 6
பல்கலைக்கழக வேந்தர் உயர்திரு அ. சீனிவாசன் அவர்கள், திரு சு. சி. பொன்முடி அவர்களுக்குப் பயனாடை அணிவித்தல்
புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 7
பல்கலைக்கழக வேந்தர் உயர்திரு அ. சீனிவாசன் அவர்கள், திரு சு. சி. பொன்முடி அவர்களுக்கு நினைவுப் பரிசு அளித்தல்
புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 8
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரி முதல்வர் மற்றும் தேனித் தமிழ்ச் சங்கத் தலைவர் கையொப்பமிடுதல்
புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் -9
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரி முதல்வர் மற்றும் தேனித் தமிழ்ச் சங்கச் செயலாளர் கையொப்பமிடுதல்
புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம் - 10
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட இலக்கிய அமைப்புகளுடனான குழுப்படம்

© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)