TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம், தர்ப்பூசனியில் திருவள்ளுவர் சிலை செதுக்கும் நிகழ்வு (12-3-2024)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

படங்கள்
தேனித் தமிழ்ச் சங்கம் - தர்ப்பூசனியில் திருவள்ளுவர் சிலை செதுக்கும் நிகழ்வு (31-12-2024)


தேனி பங்களாமேட்டிலுள்ள எம்.எம். மருத்துவமனை வளாகத்தில் 31-12-2024 அன்று தேனித் தமிழ்ச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் சங்கத்தின் செயலாளர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், பொருளாளர் அ. முகமது பாட்சா முன்னிலையில் நடைபெற்றது. கன்னியாகுமரிக் கடலின் நடுவே அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பெற்று 25 ஆண்டுகளாவதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் வெள்ளி விழாவினைச் சிறப்பிக்கும் வகையில், திருவள்ளுவர் சிலையினைத் தர்ப்பூசனியில் செதுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும், காய்கனிச் சிற்பக் கலைஞருமான கலைவளர்மணி மு. இளஞ்செழியன் அவர்கள் மூன்று மணி நேரத்திற்குள் தர்ப்பூசனியில் திருவள்ளுவர் சிலையினைச் செதுக்கி, தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணியிடம் வழங்கினார். இந்நிகழ்வில், டாக்டர் பாஸ்கரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ரெ. ம. தாமோதரன், டாக்டர் மோனிகா பிரீத்தி, செல்வ முருகதாஸ், பொன் கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பங்கேற்ற 25 பேர்களுக்கு திருக்குறள் நூல் பரிசாக அளிக்கப்பட்டது. முடிவில் நிருவாகக் குழு உறுப்பினர் கா. அய்யப்பன் நன்றி கூறினார்.

தேனித் தமிழ்ச் சங்கம் - தர்ப்பூசனியில் திருவள்ளுவர் சிலை செதுக்கும் நிகழ்வு (31-12-2024) - படங்கள்

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

சிறப்புக் கூட்டம் - படம் - 1
தர்ப்பூசனியில் செதுக்கப்பெற்ற திருவள்ளுவர் சிலையினை சங்கத்தின் செயலாளர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி பெற்றுக் கொண்டார்./div>
சிறப்புக் கூட்டம் - படம் - 2
டாக்டர் மோனிகா பிரீத்தி அவர்களுக்கு திருக்குறள் நூல் பரிசாக அளிக்கப்பட்டது
சிறப்புக் கூட்டம் - படம் - 3
செல்வ முருகதாஸ் அவர்களுக்கு திருக்குறள் நூல் பரிசாக அளிக்கப்பட்டது

© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)