TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - தேனி மு. சுப்பிரமணி (Theni M. Subramani)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

உறுப்பினர்கள்


தேனி மு. சுப்பிரமணி

உறுப்பினர் எண்
தே.த.ச/001/2017
உறுப்பினர் பெயர்
தேனி மு. சுப்பிரமணி
தந்தை பெயர்
சு. முத்துசாமி
பிறந்த நாள்
01-05-1967
கல்வி
எம்.ஏ., எம்.பில்., பிஜிடிஜே & எம்சி., டிஎல்எல் & ஏஎல்., சி.இ.எஸ்.சி.,
தொழில்
எழுத்தாளர் & பத்திரிகையாளர்
முகவரி
19/1, சுகதேவ் தெரு, பழனிசெட்டிபட்டி, தேனி - 625531.
அலைபேசி
+91 - 9940785925, 9042247133
மின்னஞ்சல்
msmuthukamalam@gmail.com
தமிழ்ச் சங்கம் / தமிழ் அமைப்புகளில் பொறுப்புகள்:

1. தலைவர், தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017/பெரியகுளம்) -செப்டம்பர்’ 27, 2017 முதல்

2. செயலாளர், சங்கம் தமிழ் அறக்கட்டளை (Sangam Tamil Foundation), (பதிவுஎண்: 538/2012/கொன்னூர், சென்னை) - ஆகஸ்ட் 30, 2012 முதல்

3. செயற்குழு உறுப்பினர், கணித்தமிழ்ச் சங்கம் (மதுரைக் கிளை) -பிப்ரவரி’ 2012 முதல்

4. செயற்குழு உறுப்பினர், தமிழ் இணையக் கழகம் (Tamil Internet Academy)

முன்பு வகித்த பொறுப்புகள்

1. துணைச் செயலாளர், பாரதி கலை - இலக்கிய மன்றம், தூத்துக்குடி (1983 - 1992)

2. செயற்குழு உறுப்பினர், நெல்லை, வ. உ. சி மாவட்ட துணுக்கு எழுத்தாளர் சங்கம் (1983 - 1989)

3. அமைப்பாளர், வ. உ .சி. வெள்ளிமணி இளந்தளிர் மன்றம், தேனி (1986 - 1989)

4. மாநிலச் செயற்குழு உறுப்பினர், தமிழ் எழுத்தாளர் பேரவை (நீலகிரி) (1987 - 1990)

5. உறுப்பினர், தேனி இலக்கியப் பணி மன்றம், தேனி (1988 - 1990)

வடிவமைத்துப் பராமரிக்கும் வலைத்தளங்கள்:

1. முத்துக்கமலம் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com) - பன்னாட்டுத்தரத் தொடர் வரிசை எண் (ISSN 2454 - 1990)

2. Theni Times - Theni District Information & News (www.thenitimes.com)

3. தேனித் தமிழ்ச் சங்கம் அமைப்பிற்கான வலைத்தளம் (www.thenitamilsangam.org).

துணை ஆசிரியராக இருக்கும் வலைத்தளங்கள்:

1. அகல்விளக்கு பல்சுவை இணைய இதழ் (http://www.agalvilakku.com)

2. தமிழ் திரை உலகம் திரைப்பட இணைய இதழ் (http://www.tamilthiraiulagam.com).

வெளியான படைப்புகள்:

தமிழில் வெளியாகும் பல்வேறு அச்சிதழ்களில் தேனி. மு. சுப்பிரமணி, முத்துக்கமலம், உ. தாமரைச்செல்வி எனும் பெயர்களில் நான்காயிரத்துக்கும் அதிமான துணுக்குகள் மற்றும் சிரிப்புகள், ஆயிரத்துக்கும் அதிகமான பொதுக்கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள், முன்னூறுக்கும் அதிகமான கணினி மற்றும் இணையம் தொடர்பான கட்டுரைகள், இருபத்திரண்டு சிறுகதைகள், முன்னூறுக்கும் அதிகமான புதுக்கவிதைகள் இதுவரை வெளியாகி இருக்கின்றன.

வெளியான தொடர்கள்:

1. தினத்தந்தி நாளிதழின் செவ்வாய்க்கிழமை இணைப்பு இதழான ஆன்மிக மலரில்“அற்புத மகான்கள்” எனும் தலைப்பிலான மகான்கள் குறித்த வரலாற்றுத் தொடர்23-08-2011 முதல் 18-09-2012 வரை 57 வாரங்கள் வெளியானது.

2. தமிழ் கம்ப்யூட்டர் மாதமிருமுறை இதழில் “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க” எனும் கணினித் தொழில்நுட்பத் தொடர் ஜனவரி 1-15, 2013 இதழ் முதல் டிசம்பர் 16-31, 2013 வரை 24 இதழ்களில் வெளியானது.

3. தினத்தந்தி நாளிதழின் செவ்வாய்க்கிழமை இணைப்பு இதழான ஆன்மிக மலரில்“சாப - விமோசனக் கதைகள்” எனும் தலைப்பிலான ஆன்மிகத் தொடர் 22-12-2015முதல் 6-12-2016 வரை 50 வாரங்கள் வெளியானது.

எழுதியுள்ள நூல்கள்:

1. தமிழ் இணையச் சிற்றிதழ்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். (நவம்பர்’ 2010)

2. தமிழ் விக்கிப்பீடியா, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். (நவம்பர்’ 2010) - தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்ற நூல்.

3. சுவையான 100 இணையதளங்கள், கௌதம் பதிப்பகம், சென்னை. (டிசம்பர்’ 2010)

4. மாணவர்களுக்கான 100 இணையதளங்கள், கௌதம் பதிப்பகம், சென்னை. (ஆகஸ்ட்’ 2011)

5. மகளிருக்கான 100 இணையதளங்கள், கௌதம் பதிப்பகம், சென்னை. (நவம்பர்’ 2011)

6. அதிசயங்கள்! உலக அதிசயங்கள்!, தரணீஷ் பப்ளிகேசன்ஸ், சென்னை. (சூலை’ 2012)

7. அற்புத மகான்கள், கௌதம் பதிப்பகம், சென்னை. (டிசம்பர்’ 2013)

8. இந்திய தேசியப் பூங்காக்கள், கௌதம் பதிப்பகம், சென்னை. (டிசம்பர்’ 2014)

9. உலகச் சிறப்பு தினங்கள், விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர். (ஏப்ரல்’ 2015)

10. கேரளக் கோயில்கள் - தொகுதி 1, தரணிஷ் பப்ளிகேசன்ஸ், சேலம். (டிசம்பர்’2018)

11. கேரளக் கோயில்கள் - தொகுதி 2, தரணிஷ் பப்ளிகேசன்ஸ், சேலம். (டிசம்பர்’2018)

12. தமிழகக் கோயில்கள் - தொகுதி 1, தரணிஷ் பப்ளிகேசன்ஸ், சேலம். (டிசம்பர்’2018)

13. பயனுள்ள 100 இணையதளங்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. (பிப்ரவரி’2019)

14. கேரளக் கோயில்கள் பாகம் 1 (50 கோயில்கள் குறித்த கட்டுரைகள்), தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், மதுரை. (டிசம்பர்’2022)

15. கேரளக் கோயில்கள் பாகம் 2 (45 கோயில்கள் குறித்த கட்டுரைகள்), தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், மதுரை. (டிசம்பர்’2022)

16. விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், மதுரை. (ஜனவரி’2023)

இசைத் தமிழ்க் குறுந்தகடுகள்

இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையில்“சங்கத் தமிழ்ப் பெண்பாற் புலவர் பாடல்கள்” எனும் தலைப்பிலான சங்கத்தமிழ்ப் பெண்பாற் புலவர்களின் பாடல்கள் மற்றும் அதற்கான விளக்கவுரை போன்றவற்றைத் திரை இசைக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கம் செய்து, குறுந்தகடுகளாக வழங்கும் திட்டத்தின் முதல் பகுதியாக ஔவையார் பாடல்களில் 20 பாடல்களை இசைத்தமிழ்க் குறுந்தகடாக உருவாக்கம் செய்யும் குழுப் பணி.

விக்கிப்பீடியா பங்களிப்பு:

தமிழ் மொழியிலான தமிழ் விக்கிப்பீடியாவில் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 14முதல் பங்களிப்புகளைச் செய்யத் தொடங்கி, 2011 ஆம் ஆண்டு சூன் 26ல் பயனர் நிர்வாகியாக வாக்கெடுப்பின் வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்விதப் பொருளாதாரப் பயனுமின்றி, தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் நோக்கத்துடன் இவர் 1088 கட்டுரைகளைத் தொடங்கியதுடன், 23,000 தொகுப்புகளையும் செய்து இருக்கிறார்.

தமிழ் இணைய மாநாட்டுப் பங்களிப்பு:

1. தமிழ்நாடு அரசு, 2010 சூன் மாதம் கோயம்புத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டை நடத்தியது. இதனையொட்டித் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பிற்காகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தகுந்த தகவல் பக்கங்களை (கட்டுரைகள்) எழுதும் போட்டி ஒன்று நடத்தப் பெற்றது. இப்போட்டிக்காகத் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையால் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தமிழ் விக்கிப்பீடியா சார்பில் குழு உறுப்பினராகப் பங்கேற்பு.

2. தமிழ்நாடு அரசு கடந்த 2010 ஆம் ஆண்டு சூன் மாதம் நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்தப் பெற்ற ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டில் 24-06-2010 அன்று உமர்தம்பி அரங்கில் மூன்றாவது அமர்வில்“தமிழ் மின் தரவு மற்றும் மின்னகராதிகள்” எனும் தலைப்பிலான ஆய்வரங்கில்“தமிழ் விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியம்” எனும் தலைப்பில் கட்டுரை வாசிப்பு.

3. இம்மாநாட்டில் 26-06-2010 அன்று யாழன் சண்முகலிங்கம் அரங்கில் “கணினிமொழியியல்” எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் சென்னை, பத்ரிசேசாத்திரி முன்னிலையில் நடைபெற்ற “வலைப்பூக்கள் மற்றும் விக்கிப்பீடியா குறித்த கலந்துரையாடல்” நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பில் பங்களிப்பு.

4. ‘உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் (கனடா)’ 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 27முதல் அக்டோபர் 29 வரை கனடாவில் நடத்திய உலகத் தமிழ் இணைய மாநாட்டில்‘பரிசுகள் தேர்வுக் குழு’ உறுப்பினராகப் பங்களிப்பு.

5. உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் (கனடா) கனடாவின் டோரண்டோ நகரில் 27-10-2017 முதல் 29-10-2017 வரை நடத்திய ‘இணையவழிக் கற்றல் - கற்பித்தலின் இன்றைய நிலை’ எனும் தலைப்பிலான தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளை 28-10-2017 அன்று திருச்சி, பிசப் ஹீபர் கல்லூரியில் இணைய வழியில் ஒருங்கிணைத்து நடத்தியக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுச் சிறப்புரை.

6. OISCA சர்வதேச நிறுவனம் (ஜப்பான்), தமிழ் அநிதம் (அமெரிக்கா), உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா), வல்லமை மற்றும் முத்துக்கமலம் மின்னிதழ்கள், சிவகாசி, தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திண்டுக்கல் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி, சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் நாகூர் தமிழ்ச் சங்கம் இணைந்து 2020, அக்டோபர் மாதம் 2, 3, 4 நாட்களில் நடத்தத் திட்டமிட்டிருக்கும் ‘கல்வியியல்’ எனும் பொருண்மையிலான இணையவழிப் பன்னாட்டு மாநாட்டுப் பணிகளில் ஆய்வு வல்லுநர் குழு, பதிப்பகக் குழு மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு ஆகியவற்றில் உறுப்பினராகப் பங்கேற்பு.

கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் :

1. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 25-02-2011 அன்று நடத்தப் பெற்ற பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கான ஆட்சி மொழிக் கருத்தரங்கில் “இணையத்தில் ஆட்சித்தமிழ்”எனும் தலைப்பில் கருத்துரை.

2. கிராமப்பகுதிப் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்குத் தங்கள் கிராமத்திலுள்ள பல்வேறு குறைகளை நிறைவேற்றக் கோரும் விண்ணப்பத்தினை இணைய வழியில் அளிக்கும் வகையில், மதுரை மாவட்ட ஆட்சியர் உ. சகாயம் இ.ஆ.ப அவர்கள் கொண்டு வந்த “தொடுவானம்” எனும் சிறப்புத் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 16-07-2011 அன்று நடத்தப் பெற்ற மதுரை மாவட்ட ஊராட்சி மன்ற உதவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு,“தொடுவானம் மென்பொருள்” உதவியுடன் “எளிய முறையில் தமிழ் தட்டச்சு செய்தல் மற்றும் தமிழில் குறைகளைச் சரி செய்ய வேண்டுதல்” குறித்துப் பயிற்சியளிக்கும் பயிற்றுநர் குழுவில் ஒருவராகப் பங்களிப்பு.

3. திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் பல்கலைக்கழக மானியக் குழுவின் 11-வது திட்டத்துடன் இணைந்த அரசுப் பணி நுழைவுத் திட்டங்களுக்கான பயிற்சி வகுப்புகளில் 09-03-2012அன்று “போட்டித் தேர்வுகளுக்கு உதவும் இணையதளங்கள்” எனும் தலைப்பில் உரை மற்றும் செயல்முறைப் பயிற்சியளித்துப் பங்களிப்பு.

4. கணினித்தமிழ்ச் சங்கம், மதுரைக் கிளை மற்றும் சென்னை, டோவ் மல்டிமீடியா நிறுவனம் இணைந்து 02-08-2012 அன்று மதுரையில் நடத்திய “தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி” பட்டறையில் உரை மற்றும் செயல்முறைப் பயிற்சியளித்துப் பங்களிப்பு.

5. கணினித்தமிழ்ச் சங்கம், மதுரைக் கிளை மற்றும் சென்னை, டோவ் மல்டிமீடியா நிறுவனம் இணைந்து 04-08-2012 அன்று தேனியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய கணினித் தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி முகாமில்“கணினியில் தமிழ்த் தட்டச்சுக்கான எளிய முறைகள்” எனும் தலைப்பில் உரை மற்றும் செயல்முறைப் பயிற்சியளித்துப் பங்களிப்பு.

6. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, திருச்சி, திருவரங்கத்தில்22-09-2012 முதல் 28-09-2012 வரை நடத்திய 32 மாவட்டங்களில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான “இளந்தமிழர் இலக்கியப் பட்டறை” எனும் சிறப்புப் பயிலரங்கில் 28-09-2012 அன்று “இணையத் தமிழ்ப் படைப்பாக்கம்” எனும் தலைப்பில் உரை மற்றும் பயிற்சியளித்துப் பங்களிப்பு.

7. கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில், அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மண்டலம் இணைந்து, 23-01-2013 அன்று நாகர்கோவில், பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் நடத்தப் பெற்ற, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளிலான விக்கிப்பீடியாக்களில் பங்களிப்பது குறித்த “விக்கிகன்யா” பயிலரங்கில் தமிழ் விக்கிப்பீடியா குறித்து உரை மற்றும் செயல்முறைப் பயிற்சியளித்துப் பங்களிப்பு.

8. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை, அடையாறு, இந்திராநகர் இளைஞர் விடுதியில் 01-08-2013 முதல் 07-08-2013 வரை நடத்திய 32 மாவட்டங்களில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான “இளந்தமிழர் இலக்கியப் பட்டறை” எனும் சிறப்புப் பயிலரங்கில் 03-08-2013 அன்று “இணையத்தமிழ்”எனும் தலைப்பில் உரை மற்றும் பயிற்சியளித்துப் பங்களிப்பு.

9. கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறுவிலுள்ள எக்செல் பன்னாட்டுப்பள்ளி(Excel Global School), எக்செல் மத்தியப்பள்ளி (Excel Central School),எக்செல் மேல்நிலைப்பள்ளி (Excel Higher Secondary School) எனும் மூன்று பள்ளிகளை உள்ளடக்கிய எக்செல் பள்ளிகளில் 10-08-2013 அன்று நடைபெற்ற மாணவர் மன்றங்கள் தொடக்கவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இந்தியாவின் முதல் விக்கிப்பீடியா மாணவர் மன்றத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை. இப்பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்குத் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாள மொழி விக்கிப்பீடியாக்களில் பங்களிப்பது குறித்தப் பயிலரங்கில் தமிழ் மொழி விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்துச் செயல்முறைப் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

10. திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகளுக்கான மொழியியல் தரவு சேர்த்திய நிதி நல்கையில் நடத்திய“உலகமயமாதல் பின்னணியில் வளர்ந்து வரும் தமிழ்க்கணினி முயற்சிகள் -பயிலரங்கம்” எனும் நிகழ்வில் 28-02-2014 அன்று “தமிழ் விக்கிப்பீடியா -அறிமுகம்” எனும் தலைப்பில் உரை மற்றும் பயிற்சியளித்துப் பங்களிப்பு.

11. திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழாய்வுத்துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நிதி நல்கையில் நடத்திய “மின் ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் - பயிலரங்கம்”எனும் நிகழ்வில் 06-03-2014 அன்று “மின்களஞ்சியம் - விக்கிப்பீடியா”எனும் தலைப்பில் உரை மற்றும் பயிற்சியளித்துப் பங்களிப்பு.

12. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை, அடையாறு, இந்திராநகர் இளைஞர் விடுதியில் 09-09-2014 முதல் 15-09-2014 வரை நடத்திய 32 மாவட்டங்களில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான “இளந்தமிழர் இலக்கியப் பட்டறை” எனும் சிறப்புப் பயிலரங்கில் 12-09-2014 அன்று “இணையத் தமிழ்”எனும் தலைப்பில் உரை மற்றும் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

13. திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், நவலூர்குட்டப்பட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகக் கலை & அறிவியல் கல்லூரி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நிதி நல்கையில் நடத்திய “மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்” எனும் தலைப்பிலான கருத்தரங்கத்தில் 08-01-2015 அன்று “மின் ஊடகங்களில் சங்கத்தமிழ்ச் சொல்லடைவுகளின் தேவைகளும் தொகுப்புகளும்” எனும் தலைப்பில் கருத்துரை வழங்கிப் பங்களிப்பு.

14. கும்பகோணம், அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நிதி நல்கையில் நடத்திய “தொல்காப்பியம் -சொல்லதிகார உரைகள்” எனும் தலைப்பிலான கருத்தரங்கத்தில் 06-03-2015 அன்று“இணையத்தில் தொல்காப்பியப் பதிவுகளும் தேவைகளும்” எனும் தலைப்பில் கருத்துரை வழங்கிப் பங்களிப்பு.

15. திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம், தமிழ்த்துறை மற்றும் வேலைவாய்ப்புத் தகவல் மையம் இணைந்து நடத்திய“தமிழ்க்கணினிப் பயிலரங்கம்” நிகழ்வில் 26-04-2015 அன்று “தமிழ் இணைய இதழ்களும் வேலைவாய்ப்புகளும்” எனும் தலைப்பில் உரை மற்றும் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

16. பெரம்பலூர், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறை 01-10-2015 அன்று நடத்திய “இணையமும் தமிழும்” எனும் பொருண்மையிலான பயிலரங்கில் “இணையத்தமிழ் அறிமுகம்” எனும் தலைப்பில் பயிற்சியளித்துப் பங்களிப்பு.

17. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை, எழும்பூர், உலகப் பல்கலைக்கழகச் சேவை மையக் கூட்ட அரங்கத்தில் 15-02-2016 முதல் 21-02-2016 வரை நடத்திய 32 மாவட்டங்களில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான “இளந்தமிழர்இலக்கியப் பட்டறை” எனும் சிறப்புப் பயிலரங்கில் 20-02-2016 அன்று “இணையத்தமிழ்” எனும் தலைப்பில் உரை மற்றும் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

18. திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், நவலூர்குட்டப்பட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகக் கலை & அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை 17-2-2017 அன்று நடத்திய ‘தமிழ் இணையப் பயன்பாடுகள் -பயிலரங்கம்’ எனும் நிகழ்வில் ஐம்பது கல்லூரிப் பேராசிரியர்களுக்கு“மின்னஞ்சல்களும் மின் குழுமங்களும்” எனும் தலைப்பில் பயிற்சியளித்துப் பங்களிப்பு.

19. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனக் கூட்ட அரங்கத்தில் 21-02-2017 முதல் 26-02-2017வரை நடத்திய 32 மாவட்டங்களில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான “இளந்தமிழர் இலக்கியப் பட்டறை” எனும் சிறப்புப் பயிலரங்கில் 22-02-2017 அன்று “இணையத்தமிழ்” எனும் தலைப்பில் உரை மற்றும் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

20. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கூட்ட அரங்கத்தில் 23-10-2017 முதல் 29-10-2017 வரை நடத்திய 32 மாவட்டங்களில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான “இளந்தமிழர் இலக்கியப் பட்டறை” எனும் சிறப்புப் பயிலரங்கில் 25-10-2017 அன்று“மின்னிதழ்கள்” எனும் தலைப்பில் உரை மற்றும் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

21. இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஸ்ரீ கற்பக விநாயகர் கல்வியியல் கல்லூரியில் 17-2-2018 அன்று நடத்திய ’திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்’நிகழ்வில் ‘கற்றல் கற்பித்தலில் இணையத்தின் பயன்பாடு’ எனும் தலைப்பில் கருத்துரை வழங்கிப் பங்களிப்பு.

22. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, மதுரை, உலகத் தமிழ் சங்கம் கூட்ட அரங்கத்தில் 16-07-2018 முதல் 22-07-2018 வரை நடத்திய 32 மாவட்டங்களில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான “இளந்தமிழர் இலக்கியப் பட்டறை” எனும் சிறப்புப் பயிலரங்கில் 18-07-2018 அன்று “இணையத்தில் இன்பத்தமிழ்” எனும் தலைப்பில் உரை மற்றும் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

23. தேனித் தமிழ்ச் சங்கம், தமிழ் அநிதம் (அமெரிக்கா) மற்றும் உத்தமபாளையம், ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூரி இணைந்து, 1-11-2018 அன்று கல்லூரியின் கூட்ட அரங்கத்தில் நடத்திய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான “மின்வழித் தமிழ் கற்றல்-கற்பித்தல்” எனும் ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கில் “இணையத்தில் இன்பத்தமிழ் கற்றல்” எனும் தலைப்பில் உரை மற்றும் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

24. தமிழ் அநிதம் (அமெரிக்கா), தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி) இணைந்து, 18-12-2018 அன்று கல்லூரிக் கூடலரங்கத்தில் நடத்திய "இணையத் தமிழ்ப் பயன்பாடுகள்" எனும் ஒருநாள் பன்னாட்டுப் பயிலரங்கில் "இணையத் தமிழ்ப் பங்களிப்பின் தேவைகள்" எனும் தலைப்பில் உரை மற்றும் பயிற்சியளித்துப் பங்களிப்பு.

25. சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1-2-2019 முதல் 28-2-2019 வரை நடத்திய ‘தமிழ்த்தாய் 71 - தமிழாய்வுப் பெருவிழா’ நிகழ்வுகளில் ஒன்றான ‘அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் மற்றும் நூல் வெளியீடுகள்’ விழாவில் 3-2-2019 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்ற ‘தெ.பொ.மீ அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு’ நிகழ்வில் "பயனுள்ள 100 இணையதளங்கள்" எனும் நூல் வெளியிடப் பெற்று, அதேப் பொருண்மையில் சொற்பொழிவு.

26. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், ஆ. தெக்கூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் சுவாமி சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இரு பாலர்), கணினி அறிவியல் துறை மற்றும் தமிழ் அநிதம் (அமெரிக்கா) இணைந்து 7-2-2019 அன்று கல்லூரியில் நடத்திய “தமிழ் மொழிநுட்பமும் வேலைவாய்ப்புகளும்” எனும் தலைப்பிலான ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கத்தில் ‘மின்னிதழ் உருவாக்கம்’ எனும் தலைப்பில் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

27. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழியற்புலம், தமிழியல் துறை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து, உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு, 21-2-2019 அன்று கல்லூரியில் நடத்திய “இணையத்தில் தமிழ்” என்னும் தலைப்பிலான ஒரு நாள் தேசியப் பயிலரங்கத்தில் ‘தமிழ் மின்னிதழ்கள்’ எனும் தலைப்பில் பயிற்சியளித்துப் பங்களிப்பு.

28. புதுக்கோட்டை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதிய கலையரங்கில் 22-3-2019 அன்று நடைபெற்ற “இணையமும் தமிழும்” எனும் தலைப்பிலான மாநில அளவிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையினைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றியதுடன், பயிலரங்கில் “தமிழ் மின்னிதழ்கள்” எனும் தலைப்பில் பயிற்சியளித்துப் பங்களிப்பு.

29. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, மதுரை, உலகத் தமிழ் சங்கம் கூட்ட அரங்கத்தில் 18-08-2019 முதல் 24-08-2019 வரை நடத்திய 32 மாவட்டங்களில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான “இளந்தமிழர் இலக்கியப் பட்டறை” எனும் சிறப்புப் பயிலரங்கில் 24-08-2019 அன்று “இணையத்தில் தமிழ் வளர்ச்சி” எனும் தலைப்பில் உரை மற்றும் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

30. சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை இணைந்து 14-12-2019 மற்றும் 15-12-2019 ஆகிய இரு நாட்கள் நடத்திய முதலாவது உலகத் தமிழிசை மாநாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் 15-12-2019 அன்று நடைபெற்ற அமர்வுகளில் ஒரு அமர்வுத் தலைவராகப் பங்கேற்று உரை.

31. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகக் கூட்ட அரங்கத்தில் 21-2-2020 முதல் 27-2-2020 வரை நடத்திய ஆட்சிமொழிச் சட்ட வார நிகழ்வுகளில் ஒன்றாக 25-2-2020 அன்று நடத்தப்பெற்ற அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் தட்டச்சர், இளநிலை உதவியாளர், உதவியாளர் ஆகியோர்களுக்குக் கணினித் தமிழ் வளர்ச்சி, கணினித் தமிழ் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி, தமிழ் ஒருங்குறி எழுத்துரு பயன்பாடு, அம்மா மென் தமிழ் சொல்லாளர் பயன்படுத்துதல் குறித்துப் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

32. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, தேனி மாவட்ட ஆட்சியர் வளாகக் கூட்ட அரங்கத்தில் 3-3-2020 முதல் 9-3-2020 வரை நடத்திய ஆட்சிமொழிச் சட்ட வார நிகழ்வுகளில் ஒன்றாக 3-3-2020 அன்று நடத்தப்பெற்ற அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் தட்டச்சர், இளநிலை உதவியாளர், உதவியாளர் ஆகியோர்களுக்குக் கணினித் தமிழ் வளர்ச்சி, கணினித் தமிழ் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி, தமிழ் ஒருங்குறி எழுத்துரு பயன்பாடு, அம்மா மென் தமிழ் சொல்லாளர் பயன்படுத்துதல் குறித்துப் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

33. நாகப்பட்டினம், அ. துரைச்சாமி நாடார் மரகதவள்ளியம்மாள் மகளிர் கல்லூரி (தனனாட்சி), தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகம் இணைந்து 20-5-2020 அன்று நடத்திய ‘இணைய வழியிலான உரையரங்கம்’ நிகழ்வில் “இணையத் தேடுபொறிகள்” எனும் தலைப்பில் உரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்களிப்பு.

34. உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தனனாட்சி), தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகம் இணைந்து 16-6-2020 முதல் 20-6-2020 வரை நடத்திய ‘வளர்தமிழ் இலக்கியங்களில் பன்முகப் பார்வை’ எனும் தலைப்பிலான ‘பன்னாட்டு வலையரங்கக் கருத்துரையாடல்’ நிகழ்வில் 16-6-2020 அன்று “தமிழ் மின் நூலகங்கள்” எனும் தலைப்பில் உரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்களிப்பு.

35. சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) 20-6-2020 முதல் 22-6-2020 வரை நடத்திய ‘இணையமும் தமிழும்’ எனும் தலைப்பிலான ‘இணைய வழி தேசியக் கருத்தரங்கம் - 2020’ எனும் நிகழ்வில் 21-6-2020 அன்று “இணையத்தில் தேடுபொறிகள்” எனும் தலைப்பில் உரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்களிப்பு.

36. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, தேனி மாவட்ட ஆட்சியர் வளாகக் கூட்ட அரங்கத்தில் 7-2-2023 மற்றும் 8-2-2023 என்று இரு நாட்கள் நடத்திய ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நிகழ்வில் 8-2-2023 அன்று பிற்பகல் நடைபெற்ற ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நிகழ்வில் கருத்துரை வழங்கிப் பங்களிப்பு.

37. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, தேனி மாவட்ட ஆட்சியர் வளாகக் கூட்ட அரங்கத்தில் 21-2-2023 முதல் 28-2-2023 வரை நடத்திய ஆட்சிமொழிச் சட்ட வார நிகழ்வுகளில் ஒன்றாக 22-2-2023 அன்று அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் தட்டச்சர், இளநிலை உதவியாளர், உதவியாளர் ஆகியோர்களுக்குக் கணினித் தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் கணினித்தமிழ் ஒருங்குறி எழுத்துரு பயன்பாடு குறித்துப் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

இலக்கியக் கூட்டப் பங்களிப்புகள்:

தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற இலக்கியக் கூட்டங்கள், நூல் வெளியீட்டு நிகழ்வுகள், நூல் விமர்சனக் கூட்டங்கள், கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் என இருநூற்றுக்கும் அதிகமான இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பு மற்றும் பங்களிப்பு

பாராட்டு மற்றும் விருதுகள்:

1. தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையின் தேனி மாவட்ட மைய நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய 42-வது தேசிய நூலக வார விழாவில் வழங்கிய இணைய இதழியலுக்கான “கலை - இலக்கிய சாதனையாளர்” பாராட்டுச் சான்றிதழ் (2009)

2. தமிழ்த்திணை இணைய இதழ் (www.tamilthinai.com) ஐந்தாம் ஆண்டு விழாவில் வழங்கிய தமிழ்ப் பணியைப் போற்றும் வகையிலான “தமிழ்த்திணை விருது” (2010)

3. தேனி, தென்தேன் தமிழ்ச்சங்கம் வழங்கிய கலை இலக்கியத் துறையில் கட்டுரை, இணைய இதழியல் ஆகிய தளங்களில் சிறப்பான பங்களிப்பைச் செய்தமைக்கான பாராட்டுச் சான்றிதழ் (2011)

4. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட, சிறந்த நூல்களுக்கான போட்டியில் கலந்து கொண்ட நூல்களுள் கணினியியல் பிரிவில் சிறந்த நூலுக்கான (தமிழ் விக்கிப்பீடியா நூல்) பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் (2012)

5. சி. பா. ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆதரவில் இணைந்து மலேசியத் தலைநகர், கோலாலம்பூரில் நடத்திய “இலக்கியம், கல்வி வளர்ச்சியில் (மலேசியா, சிங்கப்பூர்) தமிழ்ஊடகங்கள்” எனும் தலைப்பிலான 6வது இதழியல் பன்னாட்டுக் கருத்தரங்கம் வழியாக வழங்கப்பட்ட “இணையத் தேனீ விருது: (2014)

6. போடிநாயக்கனூர், ஆவடையம்மாள் அறக்கட்டளை இணையத் தமிழ்ப் பங்களிப்புகளுக்காக வழங்கிய ரூ 5000/ பரிசுத்தொகையுடனான பாராட்டுச் சான்றிதழ் (2014)

7. தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை எனும் அமைப்பு பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தமிழில் முத்துக்கமலம் இணைய இதழ் நடத்தி, அதன் வழியாக இணையத்தில் தமிழ்ச் சேவையாற்றி வருவதைப் பாராட்டி வழங்கிய “படைப்பாக்க மேன்மை விருது” (2015)

8. தேனி, முல்லைப் பெரியாறு முத்தமிழ் மன்றம் வழங்கிய “கணினித் தமிழ்ச் சாதனையாளர் விருது” (2015).

9. தேனி, வையைத் தமிழ்ச்சங்கம் வழங்கிய இணையத் தமிழ்ச் சேவைக்கான “கணினித் தமிழ் விருது” (2017)

10. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை நடத்திய சிறுகதை நூற்றாண்டு விழாவில் சிறந்த படைப்பாளருக்கான சிந்தனைச் சிகரம் விருது (2017)

11. சென்னை, அம்மா தமிழ்ப்பீடம் வழங்கிய “அம்மா குயில் விருது” (2019)

பிற பாராட்டுகள்:

1. தேனி, உடையப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தொடக்க விழா நிகழ்வில், கல்லூரிக் கட்டுமானப் பணிகளுக்கான மேலாளராகச் சிறப்பாகப் பணியாற்றியமைக்காகக் கல்லூரி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட எட்டு கிராம் தங்க மோதிரத்தினை அப்போதைய மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் அவர்கள் அணிவித்துப் பாராட்டிச் சிறப்பித்திருக்கிறார். (1998)

2. தேனி உடையப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மின்னியல் துறை மூலம் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியினைச் சிறப்பாக நடத்தியமைக்காகக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட பரிசினைப் பெற்றிருக்கிறார்.

3. இவை தவிர, நுகர்வோர் பாதுகாப்புக்குழு, மனித உரிமைகள் பாதுகாப்புக்குழு உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் இவரது சமூகச்சேவையினைப் பாராட்டிச் சிறப்பித்திருக்கின்றன.

பிற சிறப்புத் தகவல்கள்:

1. முனைவர் துரை. மணிகண்டன் (தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம்குளத்தூர், திருச்சி) மற்றும் த. வானதி (புவியியல் விரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், மாயனூர், கரூர்) இணைந்து எழுதிக் கமலினி பதிப்பகம் வெளியிட்ட “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்” எனும் நூலில்“தமிழ்க் கணிப்பொறி வல்லுனர்கள் - இணையத் தமிழ்ப் பங்களிப்பாளர்கள்”எனும் தலைப்பிலான பகுதியில் தேனி. மு. சுப்பிரமணி என்று தலைப்பிட்டு, இணையத் தமிழ்ப் பங்களிப்புகள் குறித்த தகவல்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.

2. தேனி எஸ். மாரியப்பன் எழுதி கோயம்புத்தூர், விஜயா பதிப்பகம் வெளியிட்ட“தமிழ் இலக்கியத் தகவல்கள் (பொது அறிவு)” எனும் நூலில் இடம் பெற்றிருக்கும் தமிழ் இலக்கியம் தொடர்பான 1008 பொது அறிவுத் தகவல்களில் 930 எண்ணிட்ட தகவலில் “தமிழில் ‘விக்கிப்பீடியா’ எனும் நூலை எழுதித் தமிழக அரசின் பாராட்டும் பரிசும் பெற்றவர் - தேனி. எம். சுப்பிரமணி”எனும் குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.

3. தமிழ் ஆதர்ஸ் (tamilauthors.com) எனும் இணையதளத்தில் உலகம் முழுவதுமுள்ள எழுத்தாளர்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இத்தளத்தில் தேனி மு. சுப்பிரமணியின் சுயவிவரக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
4. தமிழ் விக்கிப்பீடியாவில் இவரைப் பற்றிய செய்திகளுடன் தனிக்கட்டுரை ஒன்று இடம் பெற்றிருக்கிறது.
5. சாகித்திய அகாதமி அமைப்பின் இணையதளத்தில் இடம் பெற்றிருக்கும் யார் யார் இந்திய எழுத்தாளர்கள் (Who’s Who of Indian Writers (online) எனும் தலைப்பிலான தொகுப்பில் (ISBN 978-81-260-4812-0) தமிழ் மொழியிலான எழுத்தாளர்கள் பட்டியலில் இவரைப் பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.
6. சென்னை, கௌதம் பதிப்பகத்தின் இணையதளத்தில் நூலாசிரியர்களுக்கான பக்கத்தில் இவரைப் பற்றிய செய்திகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
7. நெல்லை கவிநேசன். காம் வலைத்தளத்தில் இவரது சிறப்பு நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது.
8. குதிர் (மெய்நிகர் பகிர்வு அரங்கம்) வலையொளியில் (Youtube) இவரது சிறப்பு நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது.


© 2018-2022 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)