TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - மு. இளஞ்செழியன் (M. Elanchezhian)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

உறுப்பினர்கள்


மு. இளஞ்செழியன்

உறுப்பினர் எண்
தே.த.ச/011/2017
உறுப்பினர் பெயர்
மு. இளஞ்செழியன்
தந்தை பெயர்
முருககாந்தி
பிறந்த நாள்
5-8-1987
தொழில்
காய்கனிச் சிற்பக் கலைப் பயிற்சி
முகவரி
கதவு எண் 98, வார்டு 20, ஒட்டார் தெரு, கூடலூர் - 625518, தேனி மாவட்டம்.
அலைபேசி
+91 - 9865242186, 9677442186
மின்னஞ்சல்
chezhian87@gmail.com
நேர்காணல்கள்

1. தமிழ்நாட்டில் வெளியாகும் பெரும்பான்மையான நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் 500 க்கும் அதிகமான நேர்காணல்கள் வெளியாகி இருக்கின்றன.

2. இந்தியாவில் தமிழ்நாடு தவிர்த்து, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களிலிருந்து வெளியாகும் மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி இதழ்களிலும் பல்வேறு நேர்காணல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

3. மலேசியா, சிங்கப்பூர், சீனா, தைவான் போன்ற நாடுகளிலிருந்து வரும் சீன மொழிப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றிலும் நேர்காணல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

4. தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகள் உட்பட இந்தியாவின் முன்னனித் தொலைக்காட்சி ஊடகங்கள், மலேசிய அரசுத் தொலைக்காட்சி, தைவான் நாட்டுத் தொலைக்காட்சி ஆகியனற்றில் காய்கனிச் சிற்பக்கலையினை விளக்கி 700க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் வெளியாகி இருக்கின்றன.

சிறப்புகள்

: 1. காய்கனிச் சிற்பக் கலையில் முதன் முதலாக வாயில் கத்தியைப் பயன்படுத்தி சிற்பம் செதுக்கி உலகச் சாதனை (2013)

2. பத்தாயிரம் கிலோ பழங்களைக் கொண்டு உலக அமைதி பற்றிய விழிப்புணர்வு செய்து கின்னஸ் சாதனை (2015)

3. சீனா - தைவான் நாட்டில் நடைபெற்ற காய்கனி சிற்பக்கலைப் போட்டியில் இந்தியாவின் சார்பில் அந்நாட்டில் நடுவராகக் கலந்து கொண்டு, அந்நாட்டுத் தொலைக்காட்சியில் பல்வேறு காய்கனிச் சிற்பங்களைச் செய்து காண்பித்துப் பாராட்டு (2015)

4. உலகில் 150க்கும் அதிகமான நாடுகளீலிருந்து பங்கேற்ற உலக இளைஞர்கள் உச்சி மாநாட்டில் (IYONS 2015, Chennai) கலந்து கொண்டு காய்கனிச் சிற்பக் கலை குறித்து இளஞர்களிடம் விழிப்புணர்வு செய்தமை.

5. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இராமேஸ்வரத்தில் கலந்து கொண்ட மேனாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜே. அப்துல்கலாம் அவர்கள் நினைவு மணிமண்டபத் திறப்பு விழாவில் தர்ப்பூசனி மற்றும் பூசனிக்காய்களில் நூறு விதமான அப்துல்கலாம் உருவங்களைச் செதுக்கி வைத்து அன்றைய இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அவர்களிடம் பெற்ற பாராட்டு (2017)

6. அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களது இந்திய வருகையின் போது, அவரது உருவத்தைப் பூசனியில் செதுக்கி வைத்திருந்ததை, அனைத்து இந்திய ஆங்கில நாளிதழ்களும் ’ஒபாமா இந்திய வருகை’ படத்தொகுப்பில் ஒன்றாக வெளியிட்டிருந்தன.

பாராட்டுகள் மற்றும் விருதுகள்

1. தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை வழங்கிய தேனி மாவட்ட அளவிலான சிறந்த சிற்பக் கலைஞருக்கான ‘கலை வளர்மணி’ விருது (2017).

2. உலகச் சாதனைகளுக்கான கின்னஸ் நிறுவனத்தின் இலச்சினையை தர்ப்பூசனியில் செதுக்கிய ஒளிப்படத்தை அந்நிறுவனத்திற்கு அனுப்பியதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் பாராட்டுச் சான்றிதழ் அனுப்பியதுடன், அப்படத்தை அந்நிறுவனத்தின் வலைத்தளத்திலும் வெளியிட்டுச் சிறப்பித்தது.

3. திரைப்பட நட்சத்திரங்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிருவாகிகள், முக்கியமான நபர்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள் எனப் பலரிடமிருந்தும் பாராட்டுகள், சான்றிதழ்கள் விருதுகள் பெற்றிருப்பது.



© 2018-2022 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)