TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - ப. பாண்டியராசன் (P.Pandiyarajan)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

உறுப்பினர்கள்


ப. பாண்டியராசன்

உறுப்பினர் எண்
தே.த.ச/016/2017
உறுப்பினர் பெயர்
ப. பாண்டியராசன்
தந்தை பெயர்
பண்டாரம்
பிறந்த நாள்
15-5-1981
கல்வி
கணினிப் பொறியியல் பட்டயம் (D.C.E), எம்.ஏ., (தமிழ்), பி. ஜி. டி. சி. ஏ.
தொழில்
உதவியாளர் (கணினி இயக்குபவர்), அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தேனி.
முகவரி
க. எண் 94, வடக்குத் தெரு, உப்புக்கோட்டை அஞ்சல், போடிநாயக்கனூர் வட்டம், தேனி மாவட்டம் - 625534.
அலைபேசி
+91 - 9944052877
மின்னஞ்சல்
alexpandi2009tn@gmail.com
அமைப்புகளில் பொறுப்புகள்

செயலாளர், தமிழன் மாற்றுத்திறனாளிகள் குழு

சிறப்புகள்

பள்ளிப் பருவத்திலேயே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் பங்கு பெற்றுத் தமிழ் ஆர்வம் தழைத்திட்டது.

தேனி மாவட்டம், இராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக் கல்வி (1997-1999) பயிலும் போது மதுரை அகில இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான “நாற்றாங்கால்” நிகழ்ச்சியில் எம் பள்ளி சக மாணவர்களுடன் பங்கு பெற்று ”செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் மற்றும் ஆங்கிலேயர் விஞ்சு” உரையாடலை அரங்கேற்றிப் பரிசும் பாராட்டும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்தோம். அந்நிகழ்ச்சியில் என்னோடு பங்கு பெற்ற எம்பள்ளித் தோழன், தற்போதைய வளரும் இசைஞன் திரு.சாம் (அறிமுகத் திரைப்படம் விக்ரம் வேதா). பின்பு பள்ளி ஆண்டு விழாவில் நாங்கள் உருவாக்கிய ”திருந்திய தீவிரவாதம்” என்னும் நாடகம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் பிற்காலம் எவ்வாறு இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தியதை மறக்க இயலாது.

நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் பல்தொழிற்நுட்பக் கல்லூரியில் கணினிப் பொறியியல் பட்டயம் (1999-2002) பயிலும் போது, குஜராத் பூகம்பத்தை மையப்படுத்தி நான் எழுதிய ”ஒரு துளி கண்ணீர்” ஒரு பக்கக் கதை வார இதழில் வெளியாகிப் பரிசு பெற்றது. ஒரு வறுமை ஓவியனின் நிலையை எடுத்துரைக்க நான் படைத்த ”ஒரு தூரிகையின் கதை” என் கற்பனை படைப்புலகிற்கு பெருமை சேர்த்தது.

2007-ல் எனது ஊரான உப்புக்கோட்டை ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பில் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு வங்கிகள் மூலம் ஊக்கநிதி பெற்று வழங்கப்பட்டு முறையாக நடைபெற்று வருவதற்கு உறுதுணை புரிந்து வருகிறேன். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு மருத்துவக்காப்பீடு மற்றும் பராமரிப்பு உதவித்தொகை கிடைத்திட பெரும் துணை புரிந்தேன்.

”பிறவிக் கடலில் பெருங்கடலில் நீந்துவதற்கு” என்னால் முடிந்த சேவைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.



© 2018-2022 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)