TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - பி. நாகராஜன் (P.Nagarajan)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

உறுப்பினர்கள்


பி. நாகராஜன்

உறுப்பினர் எண்
தே.த.ச/023/2018
உறுப்பினர் பெயர்
பி. நாகராஜன்
தந்தை பெயர்
வி. பிச்சைமுத்து
பிறந்த நாள்
01-04-1963
கல்வி
பத்தாம் வகுப்பு
தொழில்
உணவக மேலாளர்
முகவரி
7/ஈ2, ஓம் சரவணபவ இல்லம், வனச்சாலை 7வது தெரு, குறுக்குத் தெரு, தேனி - 625531.
அலைபேசி
+91 - 8012912874
மின்னஞ்சல்
-----
அச்சிதழ் படைப்புகள்

1. தமிழில் வெளியாகும் பல அச்சிதழ்களில் ஆயிரத்துக்கும் அதிகமான துணுக்குகள், சிறு கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன.
2. தமிழ்நாடு அரசின் செய்தி - மக்கள் தகவல் தொடர்புத் துறை வெளியிட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மலரில் இவரது கட்டுரை ஒன்று இடம் பெற்றிருக்கிறது.

வெளியான நூல்கள்

1. அற்புதங்கள் நிறைந்த அபூர்வக் கோயில்கள்
2. காலத்தை வென்ற காவிய நாயகன் எம். ஜி. ஆர்

சேகரிப்பு ஆர்வம்

* எம்ஜிஆர் நடிப்பில் தீவிரமான பற்றுதலுடையவர். பத்திரிகைகளில் வெளியான எம்.ஜி.ஆர். படங்கள், செய்திகள் போன்றவற்றைச் சேகரித்துத் தனியாகப் புத்தகக் கட்டுகளாக்கித் தொகுத்து வைத்துள்ளார். எம்.ஜி.ஆர் படத்துடன் வெளியான பல பொருட்களையும் இவர் சேகரித்து வைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர் குறித்த நினைவுகளைச் சேகரிப்பதற்காகத் தனியாக “எம்.ஜி.ஆர் நினைவுக் களஞ்சியம்” எனும் ஒரு அமைப்பையும் இவர் நிறுவியிருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் இவர் தொகுத்துள்ள, சேகரித்துள்ள எம்ஜிஆர் நினைவுகளைக் கண்காட்சி அமைத்துக் காட்சிப்படுத்தியும் வருகிறார்.

* பன்னாட்டுத் தபால்தலைகள், பன்னாட்டு நாணயங்கள், சாவிக் கொத்துகள், பேனா போன்றவைகளை அதிக அளவில் சேகரித்து வைத்திருக்கிறார். தன்னுடைய சேகரிப்புகளைக் கொண்டு பள்ளி, கல்லூரி மற்றும் பல பொது இடங்களில் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடத்தில் தபால்தலை, நாணயம் மற்றும் அரிய பொருட்களைச் சேகரிக்கும் வழக்கத்தை ஊக்கப்படுத்தி வருகிறார்.

பாராட்டு மற்றும் விருதுகள்

1. தமிழ்நாடு அரசின் கலை - பண்பாட்டுத் துறை வழங்கும் மாவட்ட அளவிலான சிறந்த மேடை நாடக நடிகருக்கான “கலைச்சுடர் மணி விருது” (2010)



© 2018-2022 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)