TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - இரா. கணபதிராசன் (எ) தமிழாதன் (R. Ganapathyrajan@Tamilathan)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

உறுப்பினர்கள்


இரா. கணபதிராசன் (எ) தமிழாதன்

உறுப்பினர் எண்
தே.த.ச/063/2019
உறுப்பினர் பெயர்
இரா. கணபதிராசன் (எ) தமிழாதன்
தந்தை பெயர்
இராமராஜ்
பிறந்த நாள்
07-07-1939
கல்வி
எம்.ஏ., பி.எட்., எம்.பில்.,
தொழில்
முதுகலைத் தமிழாசிரியர் (பணி நிறைவு)
முகவரி
9/12, பாரி இல்லம், தொட்டியர் காளியம்மன் கோவில் தெரு, கூடலூர் -625518, தேனி மாவட்டம்.
அலைபேசி
+91 - 9944866219
மின்னஞ்சல்
------
முன்பு வகித்த பொறுப்புகள்

1. செயலாளர், கூடல் தமிழ்ச் சங்கம், கூடலூர், தேனி மாவட்டம்.

2. செயலாளர், மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக் குழு, கூடலூர், தேனி மாவட்டம்.

3. .தலைவர், வாசகர் வட்டம், கிளை நூலகம், கூடலூர், தேனி மாவட்டம்.

4. உறுப்பினர், தென்னிந்திய நாணயவியல் கழகம், அனந்தப்பூர், கர்நாடகா.

தற்போது வகிக்கும் பொறுப்புகள்

1. தலைவர், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை, கூடலூர், தேனி மாவட்டம்.

2. வாழ்நாள் உறுப்பினர், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.

3.. சிறப்பு ஆலோசகர் மற்றும் உறுப்பினர், தேனித் தமிழ்ச் சங்கம், தேனி.

வெளியிட்ட நூல்கள்

1.‘விடுதலை வேள்வியில் தேனி மாவட்டம்’ நூல் (இணையாசிரியர்: இரா. கணபதிராசன் (எ) தமிழாதன்), முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி மாவட்டம், வெளியீடு (1998)

2. சுருளி மாமலைச் சிறப்பு மலர்

3.‘வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்’ நூல் (ISBN: 978-93-8897-304-5), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை - 600098. (2019)

பட்டங்கள் / பாராட்டுகள் / விருதுகள்

1. மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது, ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர் அவர்கள் ‘தமிழாதன்’ எனும் சிறப்புப் பெயரினை அளித்துப் பாராட்டினார். அன்றிலிருந்து இவரைப் பலரும் ‘தமிழாதன்’ என்றே அழைத்து வருகின்றனர். (1981)

2. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை 1995 ஆம் ஆண்டில் நடத்திய பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், தமிழ் பாடத்தில் மாணவர்களை 100% வெற்றி பெறச் செய்தமைக்கான பாராட்டுச் சான்றிதழ். (1995)

3. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை 1998 ஆம் ஆண்டில் நடத்திய பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், தமிழ் பாடத்தில் மாணவர்களை 100% வெற்றி பெறச் செய்தமைக்கான பாராட்டுச் சான்றிதழ். (1998)

4. சிலம்பு நாயகி கண்ணகிக்குச் சிறப்புச் சேர்த்திட மங்கலதேவி கண்ணகி கோயில் அமைத்துத் தமிழரின் வழிபாட்டு உரிமையை மீட்டெடுத்திட அருந்தொண்டாற்றி வருவதைப் பாராட்டித் தேனித் தமிழ்ச் சங்கம் வழங்கிய பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு. வழங்கிச் சிறப்பித்தவர்: முனைவர் க. பசும்பொன், துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை & மேனாள் இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை. (2018)

5. மங்கலதேவி கண்ணகி கோட்ட மீட்பு பணிக்காக இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் (ISCUF) வழங்கிய சமூக சேவைக்கான விருது. வழங்கிச் சிறப்பித்தவர்: எஸ். இராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் (ISCUF) (2019)

தற்போது ஆற்றி வரும் சமூகப் பணிகள்

1. இளங்கோவடிகள் எழுதிய ‘சிலப்பதிகாரம்’ தொடர்புடைய ஆய்வுப் பணிகளைச் செய்து வரும் ஆய்வு மாணவர்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்களுக்குத் தேவையான மங்கலதேவி கண்ணகி கோட்டம் குறித்த பல்வேறு தகவல்களையும், அதற்கான ஆதாரங்களையும் வழங்கி வருதல்.

2. 1953 ஆம் ஆண்டில் மங்கலதேவி கோயில் பற்றி அறிந்த நாள் முதல், கூடலூர் மலைப்பகுதியில் அமைந்த மங்கலதேவி கோட்டமே கண்ணகி கோட்டம் என்று உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் ஆதாரப்பூர்வமாக நிறுவிட ஆய்வுப்பணிகளைச் செய்திட பல்வேறு தமிழறிஞர்களையும் அழைத்து வந்து, அவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தந்து உதவியும், பிற்காலத்தில் தொல்லியல் துறையின் ஆய்வுகளின் வழியாக அதனையும் நிறுவிய நிலையில், மங்கலதேவி கண்ணகி கோட்டத்தினைப் புதுப்பித்து, அங்கு அனைவரும் எளிதில் சென்று திரும்புவதற்கு வசதியாகத் தேனி மாவட்டம், கூடலூர் பளியங்குடியிலிருந்து மங்கலதேவி கண்ணகி கோட்டம் வரையிலான வனப்பகுதியில் புதிய சாலை வசதி அமைத்திட வேண்டும். அங்கு தினசரி வழிபாடுகள் நடத்திட வேண்டும் என்பதனை வலியுறுத்தி, 1963 ஆம் ஆண்டில் கூடல் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், அதன் பிறகு, மங்கலதேவி கண்ணகி கோட்டச் சீரமைப்புக் குழு தொடங்கி 1997 ஆம் ஆண்டு வரை அதன் செயலாளராகவும், 1997 முதல் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் தலைவராகவும் இருந்து இந்திய அரசின் தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசிற்கும் பல்வேறு கோரிக்கை கடிதங்கள் மற்றும் அரசு அலுவலர்களைச் சந்தித்து வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தற்போது வரை செய்து வருதல்.

3. மங்கலதேவி கண்ணகி கோட்டம் தொடர்பாக, 1975 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சிலம்பு நாயகியான கண்ணகிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு இலக்கிய விழாக்களை எடுத்துச் சிறப்பித்து வருதல், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மங்கலதேவி கண்ணகி கோட்டத்தில் ‘சித்திரை முழுநிலவு நாள் விழா’ எனும் பெயரிலான சிறப்பு விழாவினை நடத்தி வருதல். இவ்விழாவில் சிலம்பு நாயகி கண்ணகிக்குச் சிறப்பு வழிபாடு செய்தல், விழாவிற்கு வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு அன்னதானம் வழங்குதல், மங்கலதேவி கண்ணகி கோட்டத்திற்கு வருகை தரும் பத்து வயதுக்குட்பட்ட இரட்டைச் சிறுமிகளுக்கு (இரட்டைப் பெண் குழந்தைகள்) தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் பரிசளித்துப் பாராட்டிச் சிறப்பித்தல் போன்றவைகளைத் தொடர்ந்து செய்து வருதல்.



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)