TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - பத்திரிகை செய்திகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

பத்திரிகை செய்திகளின் தொகுப்பு - 2019

தேனித் தமிழ்ச் சங்கம் 2019 ஆம் ஆண்டில் நடத்திய கூட்டங்கள், கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்துப் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் இங்கு தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.

தேன் துளிகள் - கவியரங்கம் - 2

தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் இரண்டாம் அமவு தொடக்க விழா 23-11-2019 அன்று நடைபெற்றது.


இந்த நிகழ்வு குறித்து, தினமணி நாளிதழ் (18-10-2019) இலக்கியச் சங்கமம் பகுதியில் குறிப்பு வெளியிட்டிருந்தது. இச்செய்திக் குறிப்பினை வெளியிட்ட தினமணி நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.


புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியிலுள்ள கல்லூரி நிறுவனர் நினைவரங்கில் 23-10-2019 அன்று நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி தமிழ்த்துறைக்கும், தேனித் தமிழ்ச் சங்கத்திற்கும் இடையிலான கல்வி மற்றும் கலை, இலக்கியம், பண்பாடு ஆராய்ச்சி சார் பரிமாற்றங்கள், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான, புரிந்துணர்வு அடிப்படையிலான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.


இந்த நிகழ்வு குறித்து, தி இந்து தமிழ்திசை நாளிதழ் (25-10-2019) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தி இந்து தமிழ்திசை நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் என், கணேஷ்ராஜ் அவர்களுக்கும் நன்றி.


தேன் துளிகள் - கவியரங்கம் - 1

தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் முதல் அமர்வின் தொடக்க விழா 19-10-2019 அன்று நடைபெற்றது.


இந்த நிகழ்வு குறித்து, தினமலர் நாளிதழ் (21-10-2019) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினமலர் நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தினமலர் நாளிதழின் தேனி மாவட்டச் செய்தி அலுவலகத்தினருக்கும் நன்றி.


உறுப்பினர் அட்டை வழங்கும் விழா

தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா, 1-6-2019 அன்று நடைபெற்றது.


இந்த நிகழ்வு குறித்து, தினமணி நாளிதழ் (3-6-2019) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினமணி நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி செய்தியாளர் திரு கோ. ராஜன் அவர்களுக்கும் நன்றி.


இந்த நிகழ்வு குறித்து, தினமலர் நாளிதழ் (3-6-2019) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினமலர் நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தினமலர் நாளிதழின் தேனி மாவட்டச் செய்தி அலுவலகத்தினருக்கும் நன்றி.


உலக மகளிர் நாள் விழா

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் உத்தமபாளையம் ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூரி இணைந்து, 8-3-2019 அன்று ‘உலக மகளிர் நாள் விழா’வினை நடத்தின.


இந்த நிகழ்வு குறித்து, தினகரன் நாளிதழ் (9-3-2019) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினகரன் நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், உத்தமபாளையம் செய்தியாளர் அவர்களுக்கும் நன்றி.


உலகத் தாய்மொழிநாள் விழா

தேனித் தமிழ்ச் சங்கம், தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழியற்புலம், தமிழியல் துறை ஆகியவை இணைந்து, உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு, கல்லூரி மாணவர்கள் பயன் பெறும் வகையில் “இணையத்தில் தமிழ்” என்னும் பொருளில் ஒரு நாள் (21-2-2019) தேசியப் பயிலரங்கத்தினை நடத்தின.


இந்த நிகழ்வு குறித்து, தினத்தந்தி நாளிதழ் (23-2-2019) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் திரு கதிர்மாயா கண்ணன் அவர்களுக்கும் நன்றி.


இந்த நிகழ்வு குறித்து, தினமலர் நாளிதழ் (23-2-2019) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினமலர் நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தினமலர் நாளிதழின் தேனி மாவட்டச் செய்தி அலுவலகத்தினருக்கும் நன்றி.


ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும் - இரு நாள் தேசியப் பயிலரங்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழியற்புலம், தமிழியல் துறை ஒருங்கிணைப்பில், மதுரை காமராசர் பல்கலைக்கழக உள்தர உத்தரவாத மையம், கச்சியப்ப முனிவர் தமிழியல் கல்லூரி (முசிறி), அமெரிக்கா, ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை மற்றும் தேனித் தமிழ்ச் சங்கம் இணைந்து முதுகலை, ஆய்வியல் நிறைஞர்,முனைவர்ப் பட்ட மாணவர்கள் மற்றும் முனைவர்ப் பட்ட மேலாய்வாளர்கள் ஆய்வுத் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் “ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்” என்னும் பொருளில் இரண்டு நாள் (2-2-2019 & 3-2-2019) தேசியப் பயிலரங்கத்தினை நடத்தின.


இந்த நிகழ்வு குறித்து, தி இந்து தமிழ்திசை நாளிதழ் (9-2-2019) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தி இந்து தமிழ்திசை நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.


இந்த நிகழ்வு குறித்து, தினபூமி நாளிதழ் (8-2-2019) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினபூமி நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)