TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - பத்திரிகை செய்திகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

பத்திரிகை செய்திகளின் தொகுப்பு - 2020

தேனித் தமிழ்ச் சங்கம் 2020 ஆம் ஆண்டில் நடத்திய கூட்டங்கள், கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்துப் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் இங்கு தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.

தமிழ்ச்செம்மல் விருது பெற்றவ சங்க உறுப்பினருக்குப் பாராட்டு

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்டம் வாரியாக வழங்கப்படும் தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது பெற்ற தேனித் தமிழ்ச் சங்க உறுப்பினர் பி. நாகராஜன் (எ) தேனி ராஜதாசன் அவர்களைப் பாராட்டிய செய்தி


இந்த நிகழ்வு குறித்து, தி இந்து தமிழ்திசை நாளிதழ் (4-11-2020) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தி இந்து தமிழ்திசை நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் என். கணேஷ்ராஜ் அவர்களுக்கும் நன்றி.


பேரறிஞர் அண்ணா, கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணன், தந்தை பெரியார் பிறந்தநாள் - முத்தான மூன்று பொழிவுகள்

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, 15-9-2020 முதல் 17-9-2020 வரையிலான மூன்று நாட்கள் முறையே, பேரறிஞர் அண்ணா, கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணன் மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாட்களைச் சிறப்பிக்கும் வகையில் முத்தான மூன்று பொழிவுகள் எனும் சிறப்புப் பொழிவுகளை வழங்கியது.


இந்த நிகழ்வு குறித்து, தினசங்கு நாளிதழ் (9-9-2020) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினசங்கு நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.


இந்த நிகழ்வு குறித்து, மீடியா செய்தி இதழ் (19-9-2020) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட மீடியா செய்தி இதழ் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.


ஆசிரியர்களின் அனுபவங்கள் - ஆசிரியர் நாள் சிறப்பு நிகழ்வு

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 5-9-2020 அன்று இணைய வழியில் ஆசிரியர் நாளை முன்னிட்டு, 14 ஆசிரியர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ‘ஆசிரியர்களின் அனுபவங்கள்” எனும் தலைப்பிலான சிறப்பு நிகழ்வினை நடத்தியது.


இந்த நிகழ்வு குறித்து, தினசங்கு இதழ் (9-9-2020) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினசங்கு இதழ் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.


இணையவழிச் சிறப்புப் பட்டிமன்றம்

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 22-8-2020 அன்று இணைய வழியில் ‘இன்றைய சூழலில் வாழ்க்கை என்பது பூந்தோட்டமா?போராட்டமா?” எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றத்தை நடத்தியது.


இந்த நிகழ்வு குறித்து, மீடியா செய்தி இதழ் (24-8-2020) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட மீடியா செய்தி இதழ் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.


விடுதலை நாள் சிறப்புப் பட்டிமன்றம்

தமிழ்நாடு அரசின் தேனி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 15-8-2020 அன்று இணைய வழியில் ‘வருங்கால நல்வாழ்வுக்குத் தேவை அறிவியலே! ஆன்மிகமே!’ எனும் தலைப்பில் விடுதலை நாள் சிறப்புப் பட்டிமன்றத்தை நடத்தியது.


இந்த நிகழ்வு குறித்து, உரிமைக்குரல் மாலை நாளிதழ் (17-8-2020) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட உரிமைக்குரல் மாலை நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்குநன்றி.


தேன் துளிகள் - கவியரங்கம் - 5

தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் ஐந்தாம் அமர்வு தொடக்க விழா 22-2-2020 அன்று நடைபெற்றது.


இந்த நிகழ்வு குறித்து, தி இந்து தமிழ்திசை நாளிதழ் (24-2-2020) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தி இந்து தமிழ்திசை நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் என். கணேஷ்ராஜ் அவர்களுக்கும் நன்றி.


இந்த நிகழ்வு குறித்து, தினகரன் நாளிதழ் (27-2-2020) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினகரன் நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் திரு சிக்கந்தர் அவர்களுக்கும் நன்றி.


தேன் துளிகள் - கவியரங்கம் - 4

தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் நான்காம் அமர்வு தொடக்க விழா 25-1-2020 அன்று நடைபெற்றது.


இந்த நிகழ்வு குறித்து, தினமணி நாளிதழ் (20-1-2020) இலக்கியச் சங்கமம் பகுதியில் குறிப்பு வெளியிட்டிருந்தது. இச்செய்திக் குறிப்பினை வெளியிட்ட தினமணி நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.


இந்த நிகழ்வு குறித்து, தினத்தந்தி நாளிதழ் (20-1-2020) செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியினை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் திரு கதிர்மாயா கண்ணன் அவர்களுக்கும் நன்றி.



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)