TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - பத்திரிகை செய்திகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

பத்திரிகை செய்திகளின் தொகுப்பு - 2021

தேனித் தமிழ்ச் சங்கம் 2021 ஆம் ஆண்டில் நடத்தி வரும் கூட்டங்கள், கவியரங்கங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்துப் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் இங்கு தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.

வாக்காளர் உரிமைகளும் கடமைகளும் - உரிமை

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 26-3-2021, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு நடத்திய இணைய வழியிலான நிகழ்வில், திருநெல்வேலி, கவிஞர் பே. ராஜேந்திரன் அவர்கள், “வாக்காளர் உரிமைகளும் கடமைகளும்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.


இந்த நிகழ்வு குறித்து, தின உரிமை நாளிதழ் (30-3-2021) செய்தி வெளியிட்டிருந்தது. செய்தியினை வெளியிட்ட தின உரிமை நாளிதழின் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.


உலக நீர் நாள் - நீர் வளங்களும் நீர் மேலாண்மையும் - நான்கு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து உலக நீர் நாள் சிறப்பு நிகழ்வாக, 21-3-2021 முதல் 24-3-2021 வரை நான்கு நாட்கள் “நீர் வளங்களும் நீர் மேலாண்மையும்” எனும் பொருண்மையிலான இணைய வழியிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்தின.


இந்த நிகழ்வு குறித்து, தி இந்து தமிழ்திசை நாளிதழ் (மதுரை பதிப்பு 28-3-2021) செய்தி வெளியிட்டிருந்தது. செய்தியினை வெளியிட்ட தி இந்து தமிழ்திசை நாளிதழின் ஆசிரியர் அவர்களுக்கும், தேனி மாவட்டச் செய்தியாளர் என். கணேஷ்ராஜ் அவர்களுக்கும் நன்றி.


உலக மகளிர் நாள் - பெண்மையைப் போற்றுவோம்! - பன்னாட்டுக் கருத்தரங்கம்

சென்னை, பெரம்பூர், செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து உலக மகளிர் நாள் சிறப்பு நிகழ்வாக, 4-3-2021 முதல் 8-3-2021 வரை ஐந்து நாட்கள் “பெண்மையைப் போற்றுவோம்!” எனும் பொருண்மையிலான இணைய வழியிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்தின.


இந்த நிகழ்வு குறித்து, தினசங்கு நாளிதழ் (10-3-2021) செய்தி வெளியிட்டிருந்தது. செய்தியினை வெளியிட்ட தினசங்கு நாளிதழின் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.


உலகத் தாய்மொழி நாள் - திராவிட மொழிகளின் சிறப்புகள் - தேசியக் கருத்தரங்கம்


உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து உலகத் தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்வாக, 22-2-2021 திங்கள் கிழமையன்று கல்லூரியின் நிறுவனர் நினைவரங்கத்தில், திராவிட மொழிகளின் சிறப்புகள் எனும் பொருண்மையிலான இணைய வழியிலான தேசியக் கருத்தரங்கத்தினை நடத்தின.

இந்த நிகழ்வு குறித்து, தினசங்கு நாளிதழ் (27-2-2021) செய்தி வெளியிட்டிருந்தது. செய்தியினை வெளியிட்ட தினசங்கு நாளிதழின் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.


இந்த நிகழ்வு குறித்து, உரிமைக்குரல் மாலை நாளிதழ் (27-2-2021) செய்தி வெளியிட்டிருந்தது. செய்தியினை வெளியிட்ட உரிமைக்குரல் நாளிதழின் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.


பொங்கல் நாள், திருவள்ளுவர் நாள் மற்றும் உழவர் நாள் சிறப்பு நிகழ்வு

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, 14-1-2021 முதல் 16-1-2021 வரையிலான மூன்று நாட்கள் பொங்கல் திருநாள், திருவள்ளுவர் நாள் மற்றும் உழவர் திருநாள் சிறப்பு நிகழ்வுகளை இணைய வழியில் வழங்கிட ஏற்பாடு செய்திருந்தது.


இந்த நிகழ்வு குறித்து, தினசங்கு நாளிதழ் (19-1-2021) செய்தி வெளியிட்டிருந்தது. செய்தியினை வெளியிட்ட தினசங்கு நாளிதழின் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)