TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேன் துளிகள் கவியரங்கம் தொடக்க விழா (21-12-2019)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

காணொளிகள்
தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் நிகழ்வின் மூன்றாம் அமர்வுத் தொடக்க விழா தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், செயலாளர் சு.சி.பொன்முடி, பொருளாளர் ம. கவிக்கருப்பையா மற்றும் துணைச்செயலாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடிகள் துறைத் தலைவர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் த. கண்ணன் அவர்கள் கவியரங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் கவிஞர் கு. சுவாதி அவர்களது தலைமையில் 30 கவிஞர்கள் பங்கேற்ற ‘மார்கழிக் கோலங்கள்’ எனும் தலைப்பிலான கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகளிலிருந்து மூன்று பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.500/-, இரண்டாம் பரிசாக ரூ.300/- மூன்றாம் பரிசாக ரூ.200/- மதிப்பிலான புத்தகப் பரிசினையும் பாராட்டுச் சான்றிதழையும், கவியரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழையும் வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகத்தின் பதிப்பாளரும், மகாகவி மாத இதழின் ஆசிரியருமான கவிஞர் வதிலை பிரபா அவர்கள் வழங்கினார். முன்னதாக சங்கத்தின் துணைச்செயலாளரும், கவியரங்க ஒருங்கிணைப்பாளருமான மு. ரேணுகாதேவி வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் உறுப்பினர் கூடலூர் இரா. முருகேசன் நன்றி கூறினார்.

தேன் துளிகள் கவியரங்கம் 3 - மார்கழிக் கோலங்கள் (21-12-2019) காணொளிகள்

(சிறிய நிகழ்படத்தின் கீழுள்ள தகவல் குறிப்பில் சொடுக்கி, நிகழ்பட இணைப்பிற்குச் செல்லலாம்)


© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)