TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - விருதுகள் வழங்கும் விழா (9-7-2022)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

காணொளிகள்
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து இணைய வழியில் நடத்திய ‘இணைய வழியிலான தமிழியல் உரை மற்றும் நிகழ்வுகள்’ 150வது நிகழ்வுடன் நிறைவு செய்யப்பட்டது. இந்த இணைய வழியிலான 150 நிகழ்வுகளில் இந்தியாவைச் சேர்ந்த உரையாற்றிய 15 உரையாளர்களும், வெளிநாடுகளிலிருந்து உரையாற்றிய 11 உரையாளர்களும் என்று 26 உரையாளர்களுக்கு, ‘சொற்சுவைத் தேனீ” எனும் விருதும், அதிகமான நிகழ்வுகளில் பங்கேற்றவர்களிலிருந்து 5 பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ‘தமிழ்ச்சுவைத் தேனீ’ எனும் விருதும், நிகழ்வுக்குத் தகுதியுடைய உரையாளர்களைத் தேர்வு செய்து வழங்கியவர்கள், தொழில்நுட்ப உதவிகளைச் செய்தவர்கள் என்று நிகழ்வுக்கு உதவிய 7 பேராளர்களுக்கு ‘தமிழ்ச்சேவைத் தேனீ ‘ எனும் விருதும் வழங்கிச் சிறப்பிப்பதென முடிவு செய்யப்பெற்றது.

இதே போன்று, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகள் / நிறுவனங்கள் / அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து 19 சிறப்பு நிகழ்வுகளையும் இணைய வழியில் சிறப்பாக நடத்தியது. இச்சிறப்பு நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்தவர்களிலிருந்து இருவருக்கு ‘முத்தமிழ்த் தேனீ’ எனும் விருது வழங்கிச் சிறப்பிப்பதென முடிவு செய்யப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து இணைய வழித் தமிழ் உரைகள் - 150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா 09-07-2022, சனிக்கிழமையன்று மாலை, தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டல் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு தேனி மு. சுப்பிரமணி, செயலாளர் திரு சு.சி. பொன்முடி, பொருளாளர் திரு அ. முகமது பாட்சா, துணைத்தலைவர் திரு அ. பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் திருமதி மு. ரேணுகாதேவி வரவேற்புரையாற்றினார்.

இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்கள் விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார். திண்டுக்கல், ஆர். வி. எஸ். கல்விக் குழும இயக்குநர் முனைவர் வை. கிருஷ்ணகுமார் அவர்கள் பாராட்டுரையும், தேனி, கம்மவார் சங்கம் பொதுப்பள்ளியின் செயலாளர் திரு சேதுராஜன் வாசு அவர்கள் வாழ்த்துரையும் வழங்கினர். விருது பெற்ற விருதாளர்களின் சார்பாக, சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் மொழி (ம) மொழியியல் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்களும், சென்னை, ஸ்ரீ சேஷாத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் துணை முதல்வர் திரு கோ. மணி ஆகியோர் ஏற்புரைகளை வழங்கினர்.

இவ்விழாவில், தமிழ்நாடு அரசு விருது பெற்ற தேனித் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டனர். முடிவில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் இரா. முருகேசன் அவர்கள் நன்றி கூறினார்.

விருதுகள் வழங்கும் விழா (9-7-2022) - காணொளிகள்

(சிறிய நிகழ்படத்தின் கீழுள்ள தகவல் குறிப்பில் சொடுக்கி, நிகழ்பட இணைப்பிற்குச் செல்லலாம்)


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)