TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழிச் சிறப்பு நிகழ்வுகள் - காணொளிகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழிச் சிறப்பு நிகழ்வுகள் - காணொளிகள்
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகம் இணைந்து, கல்லூரிகள் / ஆய்வு நிறுவனங்கள் / அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து இணையம் வழியிலான சிறப்பு நிகழ்வினை அவ்வப்போது வழங்கி வருகிறது. இச்சிறப்பு நிகழ்வானது கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும், தமிழ் ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமின்றி தமிழ் ஆர்வலர்களுக்கும் பயனுடையதாக இருக்கின்றது. திரைக்காட்சியாகப் பதிவு செய்யப்பட்ட சில நிகழ்வுகளின் காணொளிகள் இப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

பாவேந்தரின் கவிதைக்களமும் கருத்துப் புலப்பாடும் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, தமிழ்த்துறை, பிரான்சு முத்தமிழ்ச் சங்கம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து பாரதிதாசன் 130-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 7-4-2021, வியாழக்கிழமையன்று “பாவேந்தரின் கவிதைக்களமும் கருத்துப் புலப்பாடும்” எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்தின. இக்கருத்தரங்க நிகழ்வுக்கு முன்பாக, பாவேந்தர் பாரதிதாசனாரின் பெயரன் கோ. செல்வம் அவர்கள் வழங்கிய வாழ்த்துக் கவிதை மற்றும் சிறப்புரைகளின் உரைத் தொகுப்பு

(சிறிய நிகழ்படத்தின் கீழுள்ள தகவல் குறிப்பில் சொடுக்கி, நிகழ்பட இணைப்பிற்குச் செல்லலாம்)


உலகத் தாய்மொழி நாள் - திராவிட மொழிகளின் சிறப்புகள் - ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்

உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து உலகத் தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்வாக, 22-2-2021, திங்கள் கிழமையன்று திராவிட மொழிகளின் சிறப்புகள் எனும் பொருண்மையிலான இணைய வழியிலான தேசியக் கருத்தரங்கத்தினை நடத்தின. இக்கருத்தரங்க உரைகளின் தொகுப்பு

(சிறிய நிகழ்படத்தின் கீழுள்ள தகவல் குறிப்பில் சொடுக்கி, நிகழ்பட இணைப்பிற்குச் செல்லலாம்)


அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பிறந்தநாள் சொற்பொழிவு

தேனி மாவட்டம், வடுகபட்டி, சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை, அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சேவா அறக்கட்டளை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு, 28-1-2021, வியாழக்கிழமையன்று, மாலை இணைய வழியில் நடத்திய சிறப்பு நிகழ்வில், கோயம்புத்தூர், பி. எஸ். ஜி. கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் இராம. பரிமளம் அவர்கள், வள்ளலார் காட்டிய வாழ்க்கை நெறிகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

(சிறிய நிகழ்படத்தின் கீழுள்ள தகவல் குறிப்பில் சொடுக்கி, நிகழ்பட இணைப்பிற்குச் செல்லலாம்)


பொங்கல் திருநாள் - சிறப்பு நிகழ்வு

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, 14-1-2021 முதல் 16-1-2021 வரையிலான மூன்று நாட்கள் பொங்கல் திருநாள், திருவள்ளுவர் நாள் மற்றும் உழவர் திருநாள் சிறப்பு நிகழ்வுகளை இணைய வழியில் வழங்கிட ஏற்பாடு செய்திருந்தது. இம்மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்வில், பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்வாக, 14-1-2021, வியாழக்கிழமை, தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவரும், பட்டிமன்றப் பேச்சாளருமான முனைவர் பெரிய முருகன் அவர்களை நடுவராகக் கொண்டு, பண்பாட்டு விழாக்களில் இளைஞர்களுக்கு ஆர்வமில்லை எனும் தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. காரைக்குடி, மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர், திரு பழ. பாஸ்கரன் அவர்கள் வழக்கினைத் தொடுக்க, சென்னை, ஸ்ரீ சேஷாத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், சென்னை, ரெயின்போ வானொலி அறிவிப்பாளருமான திருமதி ரேகா மணி அவர்கள் வழக்கினை மறுத்தும் பேசினர். நடுவர் முனைவர் பெரிய முருகன்,“பெற்றோர்களும் பெரியவர்களும் பண்பாட்டு விழாக்களில் இளைஞர்களுக்கு ஆர்வத்தை அதிகரிப்பதுடன், அதனை அடுத்தத் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க முன் வர வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்காடு மன்ற உரைகளின் தொகுப்பு

(சிறிய நிகழ்படத்தின் கீழுள்ள தகவல் குறிப்பில் சொடுக்கி, நிகழ்பட இணைப்பிற்குச் செல்லலாம்)


திருவள்ளுவர் நாள் - சிறப்பு நிகழ்வு

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, 14-1-2021 முதல் 16-1-2021 வரையிலான மூன்று நாட்கள் பொங்கல் திருநாள், திருவள்ளுவர் நாள் மற்றும் உழவர் திருநாள் சிறப்பு நிகழ்வுகளை இணைய வழியில் வழங்கிட ஏற்பாடு செய்திருந்தது. இம்மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்வில், திருவள்ளுவர் திருநாள் சிறப்பு நிகழ்வாக, 15-1-2021, வெள்ளிக்கிழமையன்று மாலை நடைபெற்றது. இம்மூன்று உரைகளின் தொகுப்பு

(சிறிய நிகழ்படத்தின் கீழுள்ள தகவல் குறிப்பில் சொடுக்கி, நிகழ்பட இணைப்பிற்குச் செல்லலாம்)


முத்தான மூன்று பொழிவுகள்

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து காணொளிக் காட்சி வழியாக நடத்திய பேரறிஞர் அண்ணா, கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணன், தந்தை பெரியார் ஆகியோரது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையிலான “முத்தான மூன்று பொழிவுகள்”சிறப்பு நிகழ்வு 15-9-2020, 16-9-2020 மற்றும் 17-9-2020 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இம்மூன்று உரைகளின் தொகுப்பு

(சிறிய நிகழ்படத்தின் கீழுள்ள தகவல் குறிப்பில் சொடுக்கி, நிகழ்பட இணைப்பிற்குச் செல்லலாம்)


ஆசிரியர்கள் நாள் சிறப்பு நிகழ்வு - ஆசிரியர்களின் அனுபவங்கள்

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, 5-9-2020 அன்று ஆசிரியர் நாள் சிறப்பு நிகழ்வாக, 14 ஆசிரியர்களின் சுவையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர்களின் அனுபவங்கள் எனும் சிறப்பு நிகழ்வினை நடத்தியது. இந்த ஆசிரியர்களின் அனுபவங்கள் சிறப்பு நிகழ்விற்கு, திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையுரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் முன்னிலையுரையாற்றினார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் நிகழ்வினைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ஆசிரியர்களின் அனுபவங்கள் உரைகள் தொகுப்பு

(சிறிய நிகழ்படத்தின் கீழுள்ள தகவல் குறிப்பில் சொடுக்கி, நிகழ்பட இணைப்பிற்குச் செல்லலாம்)


ஸ்ரீ நாராயணகுரு பிறந்தநாள் சொற்பொழிவு

மதுரை, ஸ்ரீ நாராயணகுரு பண்பாட்டுப் பேரவை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 29-8-2020, சனிக்கிழமையன்று, திருவனந்தபுரம், கேரளப் பல்கலைக்கழகம், தமிழ்த்துறை, மேனாள் தலைவர் முனைவர் காஞ்சனா அவர்கள், ஸ்ரீ நாராயணகுருவின் பார்வையில் குடும்பக் கட்டமைப்பு எனும் தலைப்பில் சிறப்புரையினை வழங்கினார்.

(சிறிய நிகழ்படத்தின் கீழுள்ள தகவல் குறிப்பில் சொடுக்கி, நிகழ்பட இணைப்பிற்குச் செல்லலாம்)



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)