TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி (12-5-2025 முதல் 16-5-2025) படங்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

படங்கள்
தேனித் தமிழ்ச் சங்கம் - கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் நிகழ்வுப் படங்கள் (12-5-2025 முதல் 16-5-2025)


தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வழங்கப் பெற்ற கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்


பயிற்சியில் பங்கேற்றவர்கள்

கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தேனித் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் ‘கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி’ எனும் தலைப்பில் மொத்தம் 80 பேர்களுக்கு கணினி மற்றும் இணையம் தொடர்புடைய பயிற்சிகள் வழங்கப்பட்டன.

சங்கத்தின் செயலாளரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி கணினியில் எளிமையாகத் தமிழில் தட்டச்சு செய்தல், தமிழ் எழுத்துருக்களை எளிதில் மாற்றுதல் , இணையத்தில் இடம் பெற்றிருக்கும் தமிழ் அகராதிகளைப் பயன்படுத்துதல், கூகுள் மொழிபெயர்ப்புக் கருவிகளைப் பயன்படுத்துதல், நாவி மற்றும் வாணி பிழைதிருத்திகளைப் பயன்படுத்துதல், தமிழ் வலைப்பூக்கள் மற்றும் மின்னிதழ்கள் உருவாக்குதல், துறை வாரியாக இடம் பெற்றிருக்கும் தேடுபொறிகள், இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்தல், தமிழ் மின் நூலகங்கள் மற்றும் மின்நூல்கள், இணையத்திலுள்ள தமிழ் வளங்களைப் பயன்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்கினார்.

இப்பயிற்சியின் தொடக்க விழா, பயிற்சி மற்றும் நிறைவு விழாப் படங்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.

பயிற்சி தொடக்க விழா மற்றும் முதல் நாள் பயிற்சி (12-5-2025)

தேனித் தமிழ்ச் சங்கம் சார்பில் 12-5-2025 முதல் 16-5-2025 வரை தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு, ‘கணினி மற்றும் இணையத் தமிழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி’ வழங்கும் நிகழ்வின் தொடக்க விழா, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் கணினி ஆய்வுக் கூட அரங்கில், கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் அவர்களது தலைமையில், தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் மு. அப்துல் காதர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இப்பயிற்சி நிகழ்வினை கல்லூரியின் முதல்வர் ஹாஜி முனைவர் ஹெச். முகமது மீரான் அவர்கள் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பொறியாளர் சு.சி. பொன்முடி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

முதல் நாள் நிகழ்வில், தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரும், எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி கணினியில் தமிழ் எனும் திரைக்காட்சி வழியிலான உரையினை வழங்கினார். அதன் பிறகு, தமிழ் எழுத்துருக்கள், எழுத்துருக்கள் பதிவிறக்கம் மற்றும் நிறுவுதல், ஒருங்குறி எழுத்துரு, ஒருங்குறி எழுத்துரு பயன்பாட்டின் அவசியம், தமிழ்த் தட்டச்சுக்கான மென்பொருட்கள் நிறுவுதல், தமிழில் எளிமையாகத் தட்டச்சு செய்தல், ஆவணங்கள் உருவாக்குதல், பல்வேறு எழுத்துருக்களில் தட்டச்சு செய்யப்பெற்ற ஆவணங்களை ஒருங்குறி எழுத்துருக்கு மாற்றம் செய்தல் குறித்த பயிற்சியினை வழங்கினார்.

கல்லூரியின் முதல்வர் ஹாஜி முனைவர் ஹெச். முகமது மீரான், தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பொறியாளர் சு.சி. பொன்முடி மற்றும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரும், எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி ஆகியோருக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பெற்றது.

பயிற்சியில் பங்கேற்று சிறப்பாகச் செயல்பட்ட மாணவர் ஒருவருக்கு எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி எழுதிய ‘சாமான்யனின் சந்தேகங்கள் - பாகம் 1’ நூல் பரிசாக அளிக்கப்பட்டது.

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 1
கல்லூரி முதல்வர் ஹாஜி முனைவர் ஹெச். முகமது மீரான் அவர்கள், பயிற்சியினைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை வழங்கினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 2
பயிற்சித் தொடக்க விழா நிகழ்வில், கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் அவர்கள் தலைமையுரை வழங்கினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 3
பயிற்சித் தொடக்க விழா நிகழ்வில், கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரிய முனைவர் மு. அப்துல் காதர் அவர்கள் முன்னிலையுரை வழங்கினார்
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 4
பயிற்சித் தொடக்க விழா நிகழ்வில், தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சு. சி. பொன்முடி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 5
கல்லூரியின் முதல்வர் ஹாஜி முனைவர் ஹெச். முகமது மீரான் அவர்களுக்குத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சு. சி. பொன்முடி அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்கிறார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 6
தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சு. சி. பொன்முடி அவர்களுக்குக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்கிறார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 7
தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சு. சி. பொன்முடி அவர்களுக்குக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்கிறார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 8
முதல் நாள் பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்ட முதுகலை மாணவர் ஜெயசீலன் அவர்களுக்குக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் அவர்கள் புத்தகப் பரிசினை வழங்கினார்.
இரண்டாம் நாள் பயிற்சி (13-5-2025)

இரண்டாம் நாள் (13-5-2025) பயிற்சியின் முதல் அமர்வில் ‘இணையம் மற்றும் இணையத்தில் அகரமுதலிகள்’ குறித்துத் திரைக்காட்சி வழியிலான உரையும், இரண்டாம் அமர்வில், இணைய அகரமுதலிகள், கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி, நாவி சந்திப்பிழை திருத்தி, வாணி பிழை திருத்தி பயன்படுத்துவது குறித்த பயிற்சியும் வழங்கப் பெற்றது.

கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் மு. அப்துல்காதர் அவர்கள் ஒருங்கிணைப்பில், கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திருமதி அ. சபானா பர்வீன் உதவியுடன் தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரும், எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி உரை மற்றும் பயிற்சியினை வழங்கினார். இன்றைய பயிற்சியில் மாணவர்கள் மகிழ்வுடன் பங்கேற்றனர்.

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 9
எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி, ‘இணையம் மற்றும் இணையத்தில் அகரமுதலிகள்’ குறித்துத் திரைக்காட்சி வழியிலான உரை வழங்கினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 10
எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி, ‘இணையம் மற்றும் இணையத்தில் அகரமுதலிகள்’ குறித்துத் திரைக்காட்சி வழியிலான உரை வழங்கினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 11
எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி, ‘இணையம் மற்றும் இணையத்தில் அகரமுதலிகள்’ குறித்துத் திரைக்காட்சி வழியிலான உரை வழங்கினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 12
கணினி மற்றும் இணையத் தமிழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் இரண்டாம் நாளில் மகிழ்வுடன் பங்கேற்ற மாணவ - மாணவியர்கள்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 13
கணினி மற்றும் இணையத் தமிழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் இரண்டாம் நாளில் மகிழ்வுடன் பங்கேற்ற மாணவ - மாணவியர்கள்.
மூன்றாம் நாள் பயிற்சி (14-5-2025)

மூன்றாம் நாள் (14-5-2025) பயிற்சியின் முதல் அமர்வில் ‘தமிழ் வலைப்பூக்கள்’ மற்றும் ‘தமிழ் மின்னிதழ்கள்’ குறித்துத் திரைக்காட்சி வழியிலான உரையும், இரண்டாம் அமர்வில், தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம் குறித்த முழுமையான பயிற்சியும், மின்னிதழ்களுக்குப் படைப்புகள் அனுப்புதல் குறித்த விளக்கமும் வழங்கப் பெற்றது.

கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் மு. அப்துல்காதர் அவர்கள் ஒருங்கிணைப்பில், கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திருமதி அ. சபானா பர்வீன் உதவியுடன் தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரும், எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி உரை மற்றும் பயிற்சியினை வழங்கினார். மாணவர் ஜெயசீலன் வழியாக, தமிழ் வலைப்பூ உருவாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 14
எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி, ‘தமிழ் வலைப்பூக்கள்’ மற்றும் ‘தமிழ் மின்னிதழ்கள்’ குறித்துத் திரைக்காட்சி வழியிலான உரை வழங்கினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 15
கணினி மற்றும் இணையத் தமிழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் மூன்றாம் நாள் பயிற்சியில் பங்கேற்ற மாணவ - மாணவியர்கள்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 16
கணினி மற்றும் இணையத் தமிழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் மூன்றாம் நாள் பயிற்சியில் பங்கேற்ற மாணவ - மாணவியர்கள்.
நான்காம் நாள் பயிற்சி (15-5-2025)

நான்காம் நாள் (15-5-2025) பயிற்சியின் முதல் அமர்வில் ‘இணையத் தேடுபொறிகள்’ மற்றும் ‘தமிழ் விக்கிப்பீடியா’ குறித்துத் திரைக்காட்சி வழியிலான உரையும், இரண்டாம் அமர்வில், தமிழ் விக்கிப்பீடியாவில் பயனராகப் பதிவு செய்தல், பயனர் பெயரில் அவர்களைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்தல் மற்றும் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரை உருவாக்குதல் குறித்துப் பயிற்சி அளிக்கப் பெற்றது. இன்றையப் பயிற்சியில், தமிழ் விக்கிப்பீடியாவில் 60-க்கும் அதிகமான புதிய பயனர் கணக்குகள் தொடங்கிப் பயனர் குறித்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப் பெற்றன.

கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் மு. அப்துல்காதர் அவர்கள் ஒருங்கிணைப்பில், கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திருமதி அ. சபானா பர்வீன் உதவியுடன் தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரும், எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி உரை மற்றும் பயிற்சியினை வழங்கினார்.

இன்றையப் பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவி அகஸ்தியா மற்றும் மாணவி ஜெசிமா ஆகியோருக்கு, எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி எழுதிய, ‘தெரிந்து கொள்ள 50 தகவல்கள்’ மற்றும் ‘சாமான்யனின் சந்தேகங்கள் - பாகம் 1’ நூல்கள் பரிசாக வழங்கப் பெற்றன.

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 17
எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி, ‘இணையத் தேடுபொறிகள்’ மற்றும் ‘தமிழ் விக்கிப்பீடியா’ குறித்துத் திரைக்காட்சி வழியிலான உரை வழங்கினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 18
கணினி மற்றும் இணையத் தமிழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் நான்காம் நாள் பயிற்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவியர்கள்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 19
கணினி மற்றும் இணையத் தமிழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் நான்காம் நாள் பயிற்சியில் பங்கேற்ற மாணவ - மாணவியர்கள்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 20
பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவி அகஸ்தியா அவர்களுக்குத் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் மு. அப்துல்காதர் அவர்கள் புத்தகப் பரிசினை வழங்கினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 21
பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவி ஜெசிமா அவர்களுக்குத் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் மு. அப்துல்காதர் அவர்கள் புத்தகப் பரிசினை வழங்கினார்.
ஐந்தாம் நாள் பயிற்சி மற்றும் பயிற்சி நிறைவு விழா (16-5-2025)

ஐந்தாம் நாள் (16-5-2025) பயிற்சியின் முதல் அமர்வில், தமிழ் மின் நூலகங்கள் மற்றும் மின் நூல்கள் குறித்துத் திரைக்காட்சி உரையும், இரண்டாம் அமர்வில் இணையத்திலுள்ள தமிழ் வளங்களைப் பயன்படுத்துவது குறித்தப் பயிற்சி அளிக்கப் பெற்றது.

இப்பயிற்சியின் நிறைவு விழா தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சு.சி.பொன்முடி தலைமையில், செயலாளர் தேனி மு. சுப்பிரமணி முன்னிலையில் நடைபெற்றது. உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா தன்னாட்சிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹெச். முகமது மீரான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன், பேராசிரியர்கள் முனைவர் அப்துல்காதர், ஈஸ்வரி, ஜெயஸ்ரீ ஆகியோர் பேசினர். ஐந்து நாட்கள் நடைபெற்ற பயிற்சி குறித்து, பயிற்சி பெற்ற மாணவ - மாணவியர்கள் சிறப்பான பின்னூட்டம் வழங்கினர். முன்னதாக, பேராசிரியர் அ. சபானா பர்வீன் வரவேற்புரை வழங்கினார்.

பயிற்சிக்கு அனுமதியளித்த கல்லூரியின் முதல்வர் ஹாஜி முனைவர் ஹெச். முகமது மீரான், தேனித் தமிழ்ச் சங்கம் சார்பில் பயிற்சி வழங்கிட ஒப்புதல் அளித்த சங்கத்தின் தலைவர் திரு சு. சி. பொன்முடி மற்றும் ஐந்து நாட்கள் பயிற்சியினை வழங்கிய தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர், எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி ஆகியோருக்குப் பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்யப் பெற்றது.

தமிழ்த்துறை மாணவர்களுக்குக் கணினிப் பயிற்சி அளித்திடப் பெரும் முயற்சி செய்து கல்லூரி நிருவாகத்தின் அனுமதியினைப் பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் அவர்கள், இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் மு. அப்துல்காதர் அவர்கள், பயிற்றுநர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்கு கணினிப் பணிகளில் உதவியாகச் செயல்பட்ட பேராசிரியர் அ. சபானா பர்வீன், பயிற்சியில் பங்கேற்றதுடன் பயிற்சிக்குத் தேவையான உதவிகளைச் செய்த பேராசிரியர்கள் ஈஸ்வரி, ஜெயஸ்ரீ மற்றும் கணினி ஆய்வுக்கூட உதவியாளர் திரு முன்னா ஆகியோருக்குத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் நினைவுப் பரிசுகள் வழங்கிச் சிறப்பு செய்யப்பெற்றது. பயிற்சியில் பங்கேற்ற மாணவ - மாணவியர்களுக்குப் பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன.

விழா முடிவில் பயிற்சி மாணவி ஜெசிமா நன்றி கூறினார்.

(சிறிய ஒளிப்படத்தினைத் திறந்து, பெரிய படமாகப் பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 22
பயிற்சி நிறைவு விழாவில், தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சு. சி. பொன்முடி தலைமையுரை வழங்கினார்
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 23
பயிற்சி நிறைவு விழாவில், தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சு. சி. பொன்முடி தலைமையுரை வழங்கினார்
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 24
கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் அவர்கள் பயிற்சி குறித்து மாணவர்களின் பின்னூட்டம் தர வேண்டிப் பேசினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 25
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி குறித்து மாணவி ஒருவர் பின்னூட்டம் வழங்கிப் பேசினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 26
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி குறித்து மாணவர் ஒருவர் பின்னூட்டம் வழங்கிப் பேசினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 27
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி குறித்து மற்றொரு மாணவி பின்னூட்டம் வழங்கிப் பேசினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 28
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி குறித்து மற்றொரு மாணவர் பின்னூட்டம் வழங்கிப் பேசினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 29
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி குறித்து மற்றொரு மாணவி பின்னூட்டம் வழங்கிப் பேசினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 30
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி குறித்து மற்றொரு மாணவி பின்னூட்டம் வழங்கிப் பேசினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 31
கல்லூரி முதல்வர் ஹாஜி முனைவர் ஹெச். முகமது மீரான் அவர்களுக்கு, எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்தார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 32
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திருமதி ஈஸ்வரி அவர்களுக்கு, தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சு.சி.பொன்முடி நினைவுப் பரிசு வழங்கினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 33
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திருமதி சபானா பர்வீன் அவர்களுக்கு, தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சு.சி.பொன்முடி நினைவுப் பரிசு வழங்கினார்.
கணினி மற்றும் இணையத் தமிழ்த் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - படம் - 34
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஜெயஸ்ரீ அவர்களுக்கு, தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சு.சி.பொன்முடி நினைவுப் பரிசு வழங்கினார்.


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)