TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனி மாவட்டத்தினர்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

தேனி மாவட்டத்தினர்
தேனி மாவட்ட அரசு விருதாளர்கள் மற்றும் பரிசு பெற்றவர்கள்



தேனி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து, தங்களுக்கான வாழ்வாதாரம் தேடி வெளியூர் சென்றவர்கள் மற்றும் தேனி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் பலர் அரசியல், திரைப்படம், இதழியல், வணிகம் என்று பல்வேறு துறைகளில் முன்னணியில் இருந்து வருகின்றனர். சிலர் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ் மொழியைக் காப்பதற்கும் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான பல்வேறு பங்களிப்புகளைச் செய்து, இந்திய அரசு / தமிழ்நாடு அரசின் விருது அல்லது பரிசுகளைப் பெற்றவர்களை இங்கு அறிமுகம் செய்வதில் மகிழ்கிறோம்.

1. இந்திய அரசின் சாகித்ய அகாதமி விருதுகள் பெற்ற தேனி மாவட்டத்தினர் (1956 முதல் 2024 வரை) (முழுத்தகவல்கள் அறிய: இங்கே சொடுக்கவும்)

2. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பெற்ற தேனி மாவட்டத்தினர் (1984 முதல் 2023 வரை) (முழுத்தகவல்கள் அறிய: இங்கே சொடுக்கவும்)

3. தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற தேனி மாவட்டத்தினர் (2015 முதல் 2023 வரை) (முழுத்தகவல்கள் அறிய: இங்கே சொடுக்கவும்)

4. தமிழ்நாடு அரசின் தூயதமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற தேனி மாவட்டத்தினர் (2020 முதல் 2023 வரை) (முழுத்தகவல்கள் அறிய: இங்கே சொடுக்கவும்)

5. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற தேனி மாவட்டத்தினர் (1971 முதல் 2023 வரை) (முழுத்தகவல்கள் அறிய: இங்கே சொடுக்கவும்)


தேனித் தமிழ்ச் சங்கம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, கலைகள் சார்ந்த துறைகளில் வளர்ச்சியையும், செழுமையையும் இலக்காகக் கொண்டு செயல்படுதல், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குக் குறிப்பாகத் தமிழில் எழுதப்படும் நல்ல படைப்புகளை ஊக்குவித்து அப்படைப்புகளை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க உதவுதல், நல்ல தமிழ் அறிஞர்களை அழைத்து இலக்கியங்களின் வழியிலான வாழ்வியலுக்கான மதிப்பீடுகளை அறிமுகம் செய்தல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே இலக்கியம் படித்தல் / படைத்தல் போன்ற முயற்சிகளை முறைப்படுத்திட வேண்டிய முயற்சிகளை மேற்கொள்தல் போன்ற நோக்கங்களை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. அந்த வழியில், மேற்காணும் நோக்கங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இந்திய அரசு / தமிழ்நாடு அரசு விருது அல்லது பரிசுகளைப் பெற்ற தேனி மாவட்டத்தினரை அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் சில பக்கங்களை இத்தளத்தில் உருவாக்கி வருகிறது. இத்தளத்தில் கூடுதல் தகவல்களைச் சேர்க்க அல்லது ஆலோசனைகளைத் தெரிவிக்க தலைவர்: +91-9344655535, செயலாளர்: +91-9940785925 எனும் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)