TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனி மாவட்டத்தினர்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பெற்ற தேனி மாவட்டத்தினர்

தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெரியோர்கள் போன்றவர்களில் சிலரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலமாக 25 வகையான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது பெறுபவர்களுக்கு தற்போது தமிழக அரசின் சார்பில் இரண்டு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையாகவும், ஒரு சவரன் அளவிலான தங்கப்பதக்கம் மற்றும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது கையொப்பமிட்ட தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

இங்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பெற்றிருக்கும் தேனி மாவட்டத்தினர் குறித்த விவரங்கள் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.


பாவேந்தர் பாரதிதாசன் விருது


பாவேந்தர் பாரதிதாசன் விருது என்பது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். தமிழ்நாடு அரசின் அரசாணை (பலவகை) எண். 1609, பொதுத் (செய்தி, மக்கள் தொடர்பு - விளம்பரம் -2) துறை, நாள்: 28-08-1978 மூலம் 1978 ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது. 1978 ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை ரூபாய் பத்தாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டன. 1996 ஆம் ஆண்டிலிருந்து 1997 ஆம் ஆண்டு வரை ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டு முதல் ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கம் மற்றும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது கையொப்பமிட்ட தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

இங்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதுகள் பெற்றிருக்கும் தேனி மாவட்டத்தினர் குறித்த விவரங்கள் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.

பாவேந்தர் பாரதிதாசன்
விருது (1984)
thenitamilsangam.org
கவிஞர் நா. காமராசன்
போ. மீனாட்சிபுரம்,
தேனி மாவட்டம்.

பாவேந்தர் பாரதிதாசன்
விருது (1986)
thenitamilsangam.org
கவிஞர் மு. மேத்தா
பெரியகுளம்,
தேனி மாவட்டம்.

பாவேந்தர் பாரதிதாசன்
விருது (1996)
thenitamilsangam.org
கவிஞர் வைரமுத்து
வடுகபட்டி,
தேனி மாவட்டம்.

பாரதியார் விருது


பாரதியார் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் ஆண்டுதோறும் பாரதியார் நெறி பரப்பும் தகமையாளர்களில் ஒருவரைத் தேர்வு செய்து வழங்கப்படும் விருதாகும். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத்துறை அரசாணை எண்.32, நாஅள் 08-12-1997 மூலம் 1997 ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டில் இவ்விருதுக்கு ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டு முதல் ரூபாய் இரண்டு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கம் மற்றும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது கையொப்பமிட்ட தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

இங்கு பாரதியார் விருது பெற்றிருக்கும் தேனி மாவட்டத்தினர் குறித்த விவரங்கள் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.


பாரதியார் விருது
(2017)
thenitamilsangam.org
முனைவர் சு. பாலசுப்பிரமணியன்
(எ) பாரதிபாலன்
சீலையம்பட்டி,
தேனி மாவட்டம்.

சிங்காரவேலர் விருது


சிங்காரவேலர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டு முதல் ரூபாய் இரண்டு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கம் மற்றும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது கையொப்பமிட்ட தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

இங்கு சிங்காரவேலர் விருது பெற்றிருக்கும் தேனி மாவட்டத்தினர் குறித்த விவரங்கள் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.


சிங்காரவேலர் விருது (2023)
thenitamilsangam.org
தேனி மு. சுப்பிரமணி
பழனிசெட்டிபட்டி,
தேனி மாவட்டம்.


(இப்பட்டியலில் விடுபட்டுப் போன தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இருப்பின் 9940785925 எனும் புலன எண்ணுக்கு பெயர், ஊர், கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படம், தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்ற ஆண்டு போன்ற குறிப்புகளை அனுப்பி வைக்கலாம்)



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)