TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனி மாவட்டத்தினர்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

தமிழ்நாடு அரசின் தூயதமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற தேனி மாவட்டத்தினர்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழாகச் செயல்பட்டு வரும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத் தமிழ் மொழியைப் பிழையில்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் தூயதமிழிலே பேசும் தனித்தமிழ்ப் பற்றாளர்களுக்கு, மாவட்டத்திற்கு ஒருவர் என்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அகராதியியல் நாள் விழாவில் தூயதமிழ்ப் பற்றாளர் விருது வழங்கப்பட்டு வருகிற்து. இவ்விருது பெறுபவர்களுக்கு, 20 ஆயிரம் விருதுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இந்த விருதுக்கு விண்ணப்பிப்போரின் தமிழ்ப் பற்றை ஆராயும் வகையில், எந்த நாளில் வேண்டுமானாலும் முன்னறிவிப்பின்றி அலைபேசி வழியாக நேர்காணல் நடத்தப்பெற்று, அதன் வழியாக, தூயதமிழ்ப் பற்றாளர் விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இங்கு தூயதமிழ்ப் பற்றாளர் விருது பெற்றிருக்கும் தேனி மாவட்டத்தினர் குறித்த விவரங்கள் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.

2020 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
தி. இராஜபிரபா
முல்லைநகர்,
அரண்மனைப்புதூர்,
தேனி மாவட்டம்.

2021 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
ஆ. சின்னச்சாமி
போடிநாயக்கனூர்,
தேனி மாவட்டம்.

2022 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
தேனி மு. சுப்பிரமணி
பழனிசெட்டிபட்டி,
தேனி மாவட்டம்.

2023 ஆம் ஆண்டு
thenitamilsangam.org
ப. பாண்டியராசன்
உப்புக்கோட்டை,
தேனி மாவட்டம்.


(இப்பட்டியலில் விடுபட்டுப் போன தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இருப்பின் 9940785925 எனும் புலன எண்ணுக்கு பெயர், ஊர், கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படம், தூயதமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற ஆண்டு போன்ற குறிப்புகளை அனுப்பி வைக்கலாம்)



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)